துபாய், மலேசியாவில் இசைப் பள்ளி தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!!!

4th of December 2013
சென்னை::ஆஸ்கார் விருதுபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த 2008ஆம் ஆண்டு சென்னையில் கே.எம். மியூசிக் கன்சர்வேடரி என்ற பெயரில் இசைப் பள்ளி ஒன்றை தொடங்கினார். தற்போது இந்த இசைப் பள்ளியின் பிரம்மாண்ட கட்டிடத்தை அவர் சென்னையில் இந்த ஆண்டு தொடங்கினார்.

இதற்கிடையில், ரஹ்மான், தனது கே.எம்.இசைப் பள்ளியை துபாய் மற்றும் மலேசியா நாடுகளிலும் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள பிரபலமான ஆடியோ மற்றும் இசைக் கருவிகள் விற்பனை மையத்திற்கு சென்றுள்ள ரஹ்மான், இசைக் கல்வி குறித்து பேசுகையில், "நீங்கள் ஒரு வீட்டில் இசைப் பயிற்சி எடுப்பதால், இசையை முழுமையாக கற்பதாகாது. ஒரு குழந்தை இசையை நன்றாக கற்றுகொள்கிறது என்றால், அவனுக்கு இசையை பற்றிய சரியான கல்வி அறிவும் இருக்கிறது. 

இசைப்பள்ளியை தொடங்கவேண்டும் என்கிற எனது முயற்சிகள், இசைக்கல்வியை கற்கவேண்டிய முக்கியத்துவத்தை இந்திய மக்கள் நன்கு புரிந்துகொள்வதற்கான ஊக்கத்தை அளித்து இருக்கிறது.  

துபாய், மலேசியா நாடுகளில் இசைப்பள்ளியை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள நான், இந்தியாவில் முறையான ஒரு கோட்பாட்டுடன் கூடிய இசைப்பள்ளியை தொடங்க விரும்புகிறேன்.

என்னை பொறுத்தவரை ஒரு இசைப்பள்ளி என்பது ஒரு குடும்பத்தை போன்றது. எந்த குழந்தையும் தானாகவே வளரும் என்று விட்டுவிடமுடியாது. நீங்கள் அவர்கள் மீது கவனம் கொள்ள வேண்டும்.  அதையே நீங்கள் இசைப்பள்ளியிலும் பின்பற்றவேண்டும்." என்று தெரிவித்தார்.

ஹார்மென் இண்டர்நேஷனல் சி.இ.ஓ. தினேஷ் பாலிவால், தங்க மூலாம் பூசப்பட்ட ஜே.பி.எல். ஹெட்போனை ரஹ்மானுக்கு பரிசாக வழங்கினார். மேலும், ஹார்மென் கம்பெனியின் இந்தியாவிற்கான விளம்பர தூதுவராக ரஹ்மான் இருப்பார் என்றும் அவர் கூறினார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments