சேர்ந்து நடிக்க சம்மதம் தெரிவித்த விஜய் - அஜீத்!!!


10th of December 2013
சென்னை::தனிப்பட்ட முறையில் நடிகர்கள் விஜயும், அஜீத்தும் நண்பர்களாக இருந்தாலும், அவர்களுடைய படங்கள் வெளியாகும் போது, அவர்களுடைய  ரசிகர்கள் என்னவோ, இந்தியா - பாகிஸ்தான் போல அவ்வபோது உருமிக்கொள்வார்கள். சமீபத்தில் இந்த உருமல்கள் குறைந்துள்ளது.

இதற்கிடையில், விஜய் - அஜீத் இருவரையும் ஒன்றாக வைத்து படம் இயக்க சில முன்னணி இயக்குநர்கள் முயற்சித்து வருகிறார்கள். அதில் ஒருவரான இயக்குநர் வெங்கட் பிரபு, தான் விரைவில் அஜீத் - விஜய் இருவரையும் ஒன்றாக வைத்து படம் ஒன்றை இயக்குவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவருடைய நம்பிக்கைக்கு காரணம், விஜய் மற்றும் அஜீத்தை அவர் தனித்தனியாக சந்தித்து தனது விருப்பத்தைச் சொன்ன போது இருவரும் ஓகே சொல்லிவிட்டார்களாம். தற்போது விஜய் - அஜீத் இணைப்புக்குக்காக கதையை தேடிக்கொண்டிருக்கும் வெங்கட் பிரபு, பிரியாணி ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments