மீன்டும் படம் தயாரிக்கும் எஸ்.பி.பி.சரண்!!!

9th of December 2013
சென்னை::சென்னை 28 படத்தின் மூலம் வெற்றி பட தயாரிப்பாளராக பிரபலமடைந்த எஸ்.பி.பி.சரண், அதன் பிறகு தொடர்ந்து பல படங்கள் தயாரித்தாலும், அதனைப் படங்களும் வியாபாரா ரீதியாக தோல்வியை தழுவியது.

சரணனின், தயாரிப்பில் கடைசியாக ஆரண்ய காண்டம் படம் வெளியாகி மக்களையே பெரும் வரவேற்பை பெற்றாலும், அதன் பிறகு படம் தயாரிப்பதை சரண், நிறுத்திக்கொண்டார்.

இந்த நிலையில், தற்பொது எஸ்.பி.பி.சரண், மீண்டும் படம் தயாரிக்க ஆரம்பித்துள்ளார். 'திருடன் போலீஸ்' என்ற படத்தை அவர் தற்பொது தயாரிக்கிறார்.

கார்த்திக் ராஜு என்ற புதுமுக இயக்குனர் இயக்கம் இப்படத்தில் அட்ட கத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார். ஐஸ்வர்யா ஹீரோயினாக நடிக்கிறார்.

இப்படத்தின் துவக்க விழா, பூஜையுடன் இன்று சென்னையில் நடைபெற்றது. விஜய் சேதுபதி நேரில் வந்து பட குழுவினரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார், இவருடன்  அட்டகத்தி படத்தின் இயக்குனர் ரஞ்சித், நான் கடவுள் ராஜேந்திரன், நிதின் சத்யா மற்றும் பலர் வந்து இருந்து வாழ்த்து தெரிவித்தனர். வந்து இருந்தவர்களை தயாரிப்பாளர்கள் சரண்  மற்றும் செல்வா, ஆகியோர் வரவேற்றனர். 
tamil matrimony_HOME_468x60.gif

Comments