குடிப்பது, அடிப்பதில் என்ன தவறு...? தன் மகன் படவிழாவில் விஜயகாந்த் கேள்வி!!!

13th of December 2013
சென்னை::விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் அறிமுகமாகும் சகாப்தம் படத்தின் தொடக்க விழா சென்னை, சாலிகிராமம், கண்ணபிரான் தெருவில் உள்ள விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் இல்ல வாயிலில், அவரது தே.மு.தி.க., கட்சியினர் மற்றும் ரசிகர்கள் புடைசூழ, அந்த தெருவே ஸ்தம்பித்து போகும் அளவுக்கு பெரும் கூட்டத்தின் இடையே தெருவை அடைத்து மேடை போட்டு பேனர் கட்சி, பிளக்ஸ் போர்டுகள் வைத்து வெகு விமரிசையாக நடந்தது.

இவ்விழாவில், இப்படத்தில் அறிமுகமாகும் தனது மகன் சண்முகப்பாண்டியனையும், அப்படக்குழுவினரையும் அறிமுகப்படுத்தி பேசினார் கேப்டன் விஜயகாந்த். அதன் விபரம் வருமாறு...

யாரும் என்னை அசைக்க முடியாது

இந்த பட துவக்கவிழாவை நடத்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் முடிவு செய்தேன். முன்னாடியே பிளான் பண்ணி அறிவித்து இருந்தால் சில தடைகள் ஏற்பட்டு இருக்கும். அதனால் தான் அவசர அவசரமாக ரெடி பண்ணி இங்கு தொடக்க விழாவை வைத்துள்ளோம். கூப்பிட்டவர்களில் சில பேரை இங்கு காணோம். அது அந்த அம்மாவுக்கு பயந்து கொண்டா என்று தெரியவில்லை. இது சினிமா மேடை இங்கு அரசியல் விரும்பவில்லை, இருந்தாலும் சில விஷயங்களை சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. எனக்கு மக்களும், இங்கு குழுமியிருக்கும் கட்சிக்காரர்களும் போதும். நீங்கள் இருக்கும் வரை யாரும் என்னை அசக்க முடியாது. என் கட்சியை விட்டு சிலர் போய்விட்டனர். ஏற்காடு தேர்தலில் என் கட்சி வேட்பாளரை நிறுத்த பயந்து கொண்டு இருந்தேன், ஏன் அந்த இடத்தில் வேட்பாளரை நிறுத்தவில்லை என்றும், ஏன் அவர் கட்சியை விட்டு போய்விட்டார் என்றும் சிலர் கேட்கிறார்கள், பலர் எழுதுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் நான் அந்த அம்மாவிற்கு பயந்து கொண்டு இல்லை. எப்போதும் நிறுத்த வேண்டும், யார் யாரை நிறுத்த வேண்டும் என்பது எனக்கு தெரியும். தேர்தலுக்கு இன்னம் நான்கு மாதங்கள் இருக்கிறது. அப்போது தெரியும் என் கட்சியில் யார் யார் இருக்கிறார்கள், யார் யாரை தேர்தலில் நிறுத்துவேன் என்பது தெரியும். இவர் ஓடி விடப்போகிறார், அவர் ஓடிவிடப்போகிறார் என்று இப்போதே வேட்பாளரை அறிவிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. எவர் கட்சியை விட்டு போனாலும், யாரை கட்சியை விட்டு வெளியேற்றினாலும் எனது கட்சி உங்களை நம்பி(விழாவிற்கு வந்தவர்களை கையை காட்டி...) தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். அதை வளர்ப்பதற்காகத்தான் நானும் என் மைத்துனர் சுதிஷும் அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறேன்.

யார் குடிக்கவில்லை...?

சிலர் டில்லி சென்றபோது அங்கு நிறைய இடங்களில் கெஜ்ரிவாலை இளம் கோபக்காரர்(யங் ஆங்ரி மேன்) என்று போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். எதிர்கட்சிகளும் அவரை அப்படித்தான் அழைக்கின்றனர். நானும் கோபக்காரன் தான், ஆனால் இங்குள்ள மற்ற கட்சிகள் என்னை கோபக்காரன் என்று அழைப்பதில்லை. குடிகாரன் என்கிறார்கள். அவர்கள் குடித்து கும்மாளமடிப்பது தெரியாதா...? யார் குடிக்கவில்லை. நீ விக்கிற நாங்கள் குடிக்கிறோம். குடிப்பது என்ன அவ்வளவு பெரிய தவறா என கேட்டார்.

என் மகனுக்கும் ஆதரவு தாருங்கள்

தொடர்ந்து பேசிய விஜயகாந்த், படத்தின் இயக்குநர், மகன் சண்முகபாண்டியன் மற்றும் சகாப்தம் படக்குழுவினரையும் மேடையில் அறிமுகம் செய்து வைத்து இங்கு குழுமியிருக்கும் மீடியாக்காரர்கள் என்னை வளர்த்துவிட்ட மாதிரி இவர்களையும் வளர்த்து விட வேண்டும். சில பல காரணங்களால் உங்களால் ஒத்துழைப்பு தர முடியவில்லை என்றாலும், ஆளும்கட்சி போலீஸ் மாதிரி அபாண்டமாக பழி சுமத்தாதீர்கள், அதற்காக உங்கள் செய்தி விளம்பரங்களுக்கு அரசு விளம்பரங்கள் கிடைக்காது, அது போனால் போகட்டும், செய்தியை திரித்து எழுதாமல், எனக்கு கலைத்துறையில் ஆரம்பகாலங்களில் ஒத்துழைப்பு தந்தது மாதிரி என் மகனுக்கும் நேர்மையாக ஒத்துழைப்பு தாருங்கள்.

தப்பு செய்பவர்களை அடிக்கிறேன்

மேலும் இங்கு சில தொலைக்காட்சிகள் சில பைட்ஸ்கள் கேட்டனர். இந்த சந்தர்ப்பத்தில் வேண்டாம், இப்போது என் மகன் அறிமுகமாகட்டும், அதை பிறகு பார்த்து கொள்ளலாம். இன்று(டிசம்பர் 12ம் தேதி) தேமுதிக செயற்குழு கூட்டம் இருப்பதால் அந்த டென்ஷனீல் ஏதாவது பேசப்போய் அது வம்பாகிவிடும். ஏதோ ஒரு டென்ஷனீல் நான் கையை ஓங்க, விஜயகாந்த் அடிக்கிறார், குடிக்கிறார் என்று மீடியாக்களில் என்னைப்பற்றி செய்தி கொளுந்து விட்டு போகும். தெருவில் போகும் எல்லோரையுமா அடிக்கிறேன், தவறு செய்பவர்களை அடிக்கிறேன். அதில் என்ன தவறு என்று ஒரு வழியாக பேசி முடித்தார் விஜயகாந்த்.

விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர், பிரபு, விக்ரம் பிரபு, கார்த்தி, தயாரிப்பாளர்கள் ஜி.கே.ரெட்டி(விஷாலின் தந்தை), ஸ்டூடியோ கிரீன் பிரபு, ஈ.ராமதாஸ், இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, கே.எஸ்.ரவிக்குமார், அரவிந்த்ராஜ், சண்முகசுந்தரம், நடிகர்கள் கருணாஸ், மயில்சாமி, போண்டா மணி, பென்ஞமின் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டு விஜயகாந்த் மாதிரி, சண்முகப்பாண்டியனையும், சகாப்தம் படக்குழுவினரையும் வாழ்த்தினர்.

ஒருபக்கம் அரசியல் ரீதியாகவும் சற்றே கோபமாக விஜயகாந்த் பேசினாலும், மற்றொருபக்கம், எனக்குகூட முதல் படத்தில் கிடைக்காத வாய்ப்பாக, எனது மகன் சண்முகப்பாண்டியனுக்கு இந்தபடத்தில் இரண்டு கதாநாயகிகளாம். இப்போதெல்லாம் என் காலம் மாதிரி ஆக்ஷ்னில் தாமே களமிறங்கி கை கால்களை முறித்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் என் மகன், எனக்கு இருந்த அதே ஈடுபாட்டுடன் கலைத்துறையில் காலூன்ற வேண்டும் என கடவுளை வேண்டுகிறேன் என்று காமெடியாகவும், கடவுள் பக்தியாகவும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments