5th of December 2013
சென்னை::தமிழ்ப் படவுலகில் முன்பெல்லாம் குடும்பப்பாங்கான வேடங்களில் நடிப்பதற்கு தனி ஹீரோயின்களும், கவர்ச்சிப் பாடலுக்கு ஆட தனி நடிகைகளும் இருந்தார்கள். பிறகு ஹீரோயின்களே கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார்கள். அம்பிகா, ராதா, குஷ்பு, கவுதமி, பானுப்பிரியா, ரம்பா, நக்மா போன்றோருக்கு பேமிலி இமேஜ் கேரக்டர்களும் பொருந்தியது. கிளாமரான காட்சிகளிலும் அவர்களால் நடிக்க முடிந்தது.
அப்போது சுகன்யா, தேவயானி, ஜோதிகா, சினேகா, பாவனா போன்றோர் குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்தனர்.பிறகு வந்த அசின், சிம்ரன், பூஜா, நயன்தாரா குறிப்பிட்ட சில ஹீரோக்களுடன் நடிக்கும்போது மட்டும் கிளாமராக நடித்தனர். மற்ற படங்களில் குடும்பப்பாங்காக நடித்தனர். த்ரிஷா, அனுஷ்கா, ஸ்ரேயா, தமன்னா, ஸ்ருதிஹாசன், காஜல் அகர்வால், சமந்தா, ஹன்சிகா, அமலா பால், டாப்ஸி, லட்சுமி ராய், சுனேனா, பூர்ணா, பிரியா ஆனந்த் போன்றோர் தமிழில் ஒருவிதமாகவும், தெலுங்கில் இன்னொரு விதமாகவும் நடித்து வருகின்றனர்.
இவர்களுக்கு மத்தியில் அட்ட கத்தி நந்திதா, லட்சுமி மேனன், சுப்ரமணியபுரம் சுவாதி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஸ்ரீதிவ்யா, நவீன சரஸ்வதி சபதம் நிவேதா தாமஸ் போன்ற இளம் நடிகைகள், குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே நடிக்கின்றனர். அவர்கள் கிளாமருக்கு தயாராக இல்லை. மேலும், பேமிலி இமேஜ் கொண்ட இவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுவதாகச் சொல்கிறார்கள்.ஸ்ரீதிவ்யாவுக்கும் லட்சுமி மேனனுக்கும் அதிக படங்கள் கிடைக்கின்றன.
நந்திதா, நிவேதா தாமஸ் அடுத்த இடங்களில் இருக்கின்றனர். கிளாமரை விட்டுவிட்டு, குடும்ப பாங்கான தோற்றம் கொண்ட ஹீரோயின்களை இயக்குனர்கள் இப்போது தேட ஆரம்பித்திருப்பதால் இவர்களுக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது’ என்றார் இயக்குனர் ஒருவர்.முன்பெல்லாம் கிளாமருடன் சிறப்பாக நடிக்கும் நடிகைகள்தான் நம்பர் ஒன் போட்டியில் இருந்தார்கள். இப்போது குடும்ப பாங்கான ரோல்களில் நடிக்கும் ஹீரோயின்கள் நம்பர் ஒன் இடத்துக்கு வர போட்டி போடுகின்றனர்.

Comments
Post a Comment