30th of December 2013
சென்னை::துப்பாக்கி படத்தை மும்பையில் படமாக்கிய முருகதாஸ் அடுத்த படத்துக்கு லொகேஷனை மாற்றிவிட்டார். விஜய் நடித்த துப்பாக்கி படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் அப்படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங்கை மும்பையில் நடத்தினார்.

படம் ஹிட்டானதை தொடர்ந்து விஜய் நடித்த தலைவா பட ஷூட்டிங்கும் மும்பையில் நடந்தது. அதேபோல் அஜீத் நடித்த ஆரம்பம் படமும் மும்பையில் படமாக்கப்பட்டது. இதையடுத்து பல கோலிவுட் படங்களுக்கு மும்பை பிரதான லொகேஷன்களில் ஒன்றாக மாறிவிட்டது.
தற்போது ஜில்லா படத்தில் நடித்து வரும் விஜய் இப்படத்தையடுத்து முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
ஆனால் ஷூட்டிங் லொகேஷனை கொல்கத்தாவுக்கு மாற்றி இருக்கிறார். ஸ்கிரிப்ட்டை ஒரு பக்கம் மெருகேற்றிக் கொண்டிருக்கும் முருகதாஸ், தனது உதவி இயக்குனர்களுடன் கொல்கத்தா சென்று ஷூட்டிங்கை நடத்துவதற்கான பிரதான இடங்களை தேர்வு செய்து வருகின்றார். இப்படத்துக்கு அனிருத் இசை அமைக்க உள்ளார்.
Comments
Post a Comment