10th of December 2013
சென்னை::தங்க மீன்கள் படத்திற்கு பிறகு ராம் டைரக்ட் செய்யும் அடுத்த படம் தரமணி. ஜே.எஸ்.கே பிலிம் கார்பரேஷன் தயாரிக்கிறது. ராமின் கட்டமாறன் புரொடக்ஷன் நிறுவனம் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்துக் கொடுக்கிறது.
தற்போது ஆவின் விஜிலன்ஸ் பிரிவில் இருக்கும் போலீஸ் ஐ.ஜி.ரவியின் மகன் வசந்த் ரவி ஹீரோவாக அறிமுகமாகிறார். ஆண்ட்ரியா ஹீரோயின். பத்திரிக்கை போட்டோகிராபர் தேனி ஈஸ்வர் கேமராமேன். யுவன் இசை. இதற்கான படப்பிடிப்பு நேற்று (டிசம்பர் 9) தொடங்கியது.
குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். கற்றது தமிழ், தங்க மீன்கள் படத்தில் சமூக பிரச்னைகளை சொன்ன ராம். இதில் ஆழனமான, யதார்த்தமான காதலை சொல்ல இருக்கிறார். உன்னோடான பயணத்தில் ரெயில் ஒரு நீண்ட புல்லாங்குழல், தனித்து போகும்போது ரெயில் ஒரு பெரிய மலைப்பாம்பு என்று தன் படத்துக்கு விளக்கம் அளித்திருக்கிறார். தரமணி டூ பீச் மின்சார ரெயிலில் நடக்கும் காதல் கதை.

Comments
Post a Comment