28th of December 2013
சென்னை::தடையற தாக்க’ படத்தைத் தொடர்ந்து ஆர்யாவை வைத்து தான் அடுத்ததாக இயக்க இருக்கும் படத்திற்கு ‘மீகாமன்’ என பெயரிட்டுள்ளார் மகிழ்திருமேனி.
சென்னை::தடையற தாக்க’ படத்தைத் தொடர்ந்து ஆர்யாவை வைத்து தான் அடுத்ததாக இயக்க இருக்கும் படத்திற்கு ‘மீகாமன்’ என பெயரிட்டுள்ளார் மகிழ்திருமேனி.
இந்தப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிப்பார் என்றுதான் முதலில் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இப்போது ஸ்ருதி ஹாசன் கிடையாதாம். அவருக்குப் பதிலாக டாப்ஸி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.
டாப்ஸி ஏற்கனவே ‘ஆரம்பம்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ‘
நான் அவன் இல்லை’, ‘மாப்பிள்ளை’ உட்பட பல படங்களை தயாரித்த நேமிசந்த் ஜபக் நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கிறது. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப்படத்திற்கு தமன் இசையமைக்க சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
கோவாவைச் சுற்றிய கதைக்களம் என்பதால் வட இந்திய நடிகர்கள் பலரும் நடிக்க இருக்கிறார்கள். விரைவில் இப்படக்குழு படப்பிடிப்புக்காக லண்டன் செல்லவிருக்கிறது.
Comments
Post a Comment