20th of December 2013
சென்னை மீண்டும் நடிக்கப் போவதாக மனிஷாகொய்ராலா அறிவித்து உள்ளார். பம்பாய், முதல்வன், இந்தியன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் மனிஷா கொய்ராலா இந்தியிலும் முன்னணி நடிகையாக இருந்தார். மனிஷா கொய்ராலாவுக்கு திடீர் புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக வெளிநாட்டில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றார். தற்போது உடல் நிலை குணமாகி இந்தியா திரும்பியுள்ளார். அவர் கூறியதாவது:–
மீண்டும் சினிமாவில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் வந்துள்ளன. கதை கேட்டு பிடித்து இருந்தால் நடிப்பேன். நான் படங்கள் தயாரிக்க போவதாக செய்திகள் வந்துள்ளன. அதில் உண்மை இல்லை. மூன்று வருடங்களுக்கு பட தயாரிப்பில் ஈடுபட மாட்டேன். என் வாழ்க்கை முறை இப்போது அடியோடு மாறிவிட்டது.
ஒவ்வொரு விஷயத்திலும் ஒழுக்கத்தை கடை பிடிக்கிறேன். தினமும் காலை 5 மணிக்கு எழுந்து விடுகிறேன். சாமி கும்பிடுகிறேன். தியானம் மற்றும் சுவாச பயிற்சிகள் செய்கிறேன். வாரத்துக்கு இருமுறை ஆஸ்பத்திரிக்கு சென்று உடல் பரிசோதனை செய்து கொள்கிறேன். வாழ்க்கை முறையை மாற்றி கொள்வதன் மூலம் நோய்களில் இருந்து மீள முடியும் புத்தகம் எழுத திட்டமிட்டு உள்ளேன். முன்பெல்லாம் பார்ட்டிக்கு போவது உண்டு. இப்போது முற்றிலும் மாறிவிட்டேன். மாலையில் நாவல்கள் படிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment