ரசிகர்களின்கனவு கன்னி பிரியங்கா சோப்ரா புத்தாண்டில் சென்னை ரசிகர்கள் முன் நடனம்!

20th of December 2013
சென்னை::சிகர்களின்கனவு கன்னியாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இந்திப்படங்களில் நடிக்க பல கோடி சம்பளம் வாங்குகிறார். விளம்பர படங்களில் நடித்தும் பணம் குவிக்கிறார். சென்னையில் நட்சத்திர ஒட்டலில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஆட பிரியங்கா சோப்ராவை அணுகினர். அவரும் சம்மதித்து உள்ளார். இதில் ஆடுவதற்காக ரூ. 6 கோடி சம்பளம் கேட்டதாக செய்திகள் வெளியானது.

31–ந் தேதி இரவு இந்த நடன நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். பிரியங்கா சோப்ராவின் நடனத்தை காண அதிக விலைக்கு டிக்கெட்கள் விற்கப்படுகின்றன. இது குறித்து பிரியங்கா சோப்ரா கூறும்போது 2014–ம் ஆண்டை சென்னையில் நடனம் ஆடி வரவேற்கப் போகிறேன் என்னுடன் சிவமணியும் இணைகிறார். அற்புதமான நிகழ்ச்சியாக அது இருக்கும்.

பொழுது போக்கு மூலம் ரசிகர்களை குஷிபடுத்துவதே என் நோக்கம். ரசிகர்களுக்கு மறக்க முடியாத புத்தாண்டு கொண்டாட்டமாக அது இருக்கும் என்றார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments