7th of December 2013
சென்னை::ஜீவா மற்றும் திரிஷா நடித்து வருகிற டிசம்பர் 20ல் வெளியாகவிருக்கும் திரைப்படம் என்றென்றும் புன்னகை.
அகமது இப்படத்தினை இயக்கியிருக்கிறார். வினய், ஆண்ட்ரியா மற்றும் சந்தானம் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீடு கடந்த அக்டோபர் 24ல் உலக நாயகன் கமல்ஹாசனால் வெளியிடப்பட்டது.
இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அனைத்துப் பாடல்களுமே ரசிகர்களிடத்தில் அமோக வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ள நிலையில் இப்படத்தில் மேலும் ஒரு பாடல் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. படத்தைப் பார்த்துவிட்டு புதிய பாடல் ஒன்றினை ரெக்கார்ட் செய்திருப்பதாகவும், ரசிகர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கும் என்றும் ஹாரிஸ் ஜெயராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கேட்கிற பாடல்களை கொடுப்பதற்கே பாடலுக்கு மூன்று மாதம் வரை எடுப்பவர் இப்போ கேட்காமலேயே ஒரு பாடலை தந்திருப்பதை கண்டு கோலிவுட்டே ஆச்சர்யத்தில் உள்ளது.
Comments
Post a Comment