மீனாட்சி தீட்ஷித் தமிழில் பெரிய ரவுண்டு வருவார் - வடிவேலு!!!

4th of December 2013
சென்னை::இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் ரஜினியுடன் நடித்த ஸ்ரேயாவே வடிவேலுவுடன் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டார். அந்த அளவுக்கு அப்போது அவரது மார்க்கெட் எகிறி நின்றது. ஆனால் அதையடுத்து வடிவேலுவுடன் நடித்த ஒரே காரணத்துக்காக ஸ்ரேயாவுடன் முன்னணி ஹீரோக்கள் நடிக்க மறுத்தது தனிக்கதை.

இந்த நிலையில், இப்போது தான் இரண்டு வேடங்களில் நடித்து வரும் ஜகஜால புஜபல தெனாலிராமன் படத்தில், அஜீத்துடன் பில்லா-2 படத்தில் நடித்த மீனாட்சி தீட்ஷித்துடன் நடித்து வருகிறார் வடிவேலு. அதுவும், ஒரு காமெடியன் என்கிற வட்டத்தை கடந்து முழு கதாநாயகர்களைப்போன்று மீனாட்சியுடன் கட்டிப்புரண்டு ஆடியிருக்கிறாராம் வடிவேலு.

அதேசமயம், மீனாட்சிக்கு சுத்தமாக தமிழே தெரியாது என்பதால், அவருடன் வடிவேலுவால் பேசவே முடியாது என்பதுதான் பெரிய சோக கதையாம். இருவரும் நடிக்க வேண்டிய காட்சிகளில், டைரக்டர் சொல்லிக்கொடுத்த பிறகு லேசாக ரிகர்சல் பார்க்க வேண்டும் என்றாலும், ஆங்கிலம் தெரிந்த உதவியாளர்களின் உதவியுடன்தான் மீனாட்சியை வடிவேலு டீல் பண்ண வேண்டியிருக்கிறதாம். ஆனாலும், நெளிவுசுழிவுடன் சில காட்சிகளை விளக்கி இப்படி இப்படி நடிக்க வேண்டும் என்று நடிப்பை வரவழைத்து விடுகிறாராம் வடிவேலு.

அதனால் இதற்கு முன்பு வடிவேலு போன்ற காமெடியன்களுடன் ஜோடி சேர்ந்த கதாநாயகிகள் பலர் காணாமல் போன நிலையில், இந்த மீனாட்சி இதன்பிறகுதான் தமிழில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று ஆரூடம் சொல்லிக்கொண்டிருக்கிறாராம் வடிவேலு.
tamil matrimony_HOME_468x60.gif

Comments