9th of December 2013
சென்னை::ஜினி, கமல், அஜித் என்று தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக
நடித்து தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாள உள்ளிட்ட தென்னிந்திய மொழிப்
படங்களிலும் நடித்து பிரபலமடைந்த மீனா, பிறகு அக்கா, அண்ணி உள்ளிட்ட
வேடங்களில் சில படங்களில் நடித்தார். அதன்பிறகு, கடந்த 2009ஆம் ஆண்டு
தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். 2011ஆம் ஆண்டு இவருக்கு பெண்
குழந்தை பிறந்தது.
இதையடுத்து நடிப்பதை தவிர்த்து வந்த மீனா, தற்போது மீண்டும் நடிக்கப்போகிறார். ‘டிரைஷ்யம்’ என்ற மலையாள படத்தில் மோகன்லால் ஜோடியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கேரளாவில் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையில் இப்படம் வெளியாக உள்ளது.
இதேபோல, தெலுங்கு மற்றும் தமிழ்ப் படங்களில் அக்கா, அண்ணி உள்ளிட்ட கதாபாத்திர வேடங்களில் நடிக்க மீனாவுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வருகிறதாம். தற்போது கதை கேட்டு வரும் மீனா, இனி தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

Comments
Post a Comment