17th of December 2013
சென்னை::சன்னி லியோனின் பாதுகாவலர்கள் செய்த அடாவடிதனத்தால் போலீசாரும், ரசிகர்களும் கோபம் அடைந்தனர். நடிகை சன்னி லியோன் ஜாக்பாட் என்ற இந்தி படத்தில் நடித்திருக்கிறார்.
சென்னை::சன்னி லியோனின் பாதுகாவலர்கள் செய்த அடாவடிதனத்தால் போலீசாரும், ரசிகர்களும் கோபம் அடைந்தனர். நடிகை சன்னி லியோன் ஜாக்பாட் என்ற இந்தி படத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்தில் காதல் பரத், சச்சின் ஜோஷி நடித்திருக்கின்றனர். பட புரமோஷன் நிகழ்ச்சிக்காக சன்னி மற்றும் சச்சின் நேற்றுமுன்தினம் பெங்களூர் வந்தனர். அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் அவர்கள் தங்குவதற்கு ரூம் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அவர்களிடம் பேட்டி எடுக்க முற்பட்டனர். இன்னும் அரை மணி நேரத்தில் வந்து பேட்டி தருவதாக கூறிவிட்டு இருவரும் ரூமிற்கு சென்றுவிட்டனர். ஆனால் மாலை 4 மணி அளவில்தான் அவர்கள் வந்தனர். முன்னதாக இருவரும் லிப்டில் வருவதாக சொல்லி மற்ற யாரையும் லிப்டுக்குள் அனுமதிக்காமல் அரை மணி நேரம் காத்திருக்க வைத்தனர்.
ஒருவழியாக கீழே வந்த சன்னி, சச்சின் இருவரும் ஓட்டலின் எதிரில் உள்ள வர்த்தக வளாகத்திற்கு புறப்பட்டனர். அவர்கள் சாலைக்கு வந்ததும் உடன் வந்த சன்னியின் பாதுகாவலர்கள் அப்பகுதியில் போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் டிராபிக் ஜாம் ஏற்பட்டது.

தூரத்தில் நின்றிருந்த போலீசார் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தவித்தனர். கோபத்தில் உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசார் நடிகையின் பாதுகாவலர்களை எச்சரித்தனர். பின்னர் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. நடிகையின் பாதுகாவலர்கள் செய்த அடாவடியை அங்கிருந்த ரசிகர்களும், பொதுமக்களும் கண்டித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Comments
Post a Comment