ஐ ப்லே வழங்கும் மேஜிக் ஹவுஸ் அனுபவம் - நடிகர் சிம்பு துவக்கி வைத்தார்!!!

22nd of December 2013
சென்னை::சென்னை வேளச்சேரி பினிக்ஸ் மார்கெட் சிட்டியில் அமைந்துள்ள ஐ ப்லே , இந்தியாவிலேயே முதல் முறையாக மேஜிக் ஹவுஸ் எனும் பெயரிலான புதுமையும் நவீனமும் நிறைந்த பொழுதுபோக்கு அனுபவத்தை அறிமுகம் செய்துள்ளது.  இதை பிரபல திரைப்பட நடிகர் சிம்பு துவக்கி வைத்தார்.

லேசர் கதிர்கள், பல அடுக்கு வீடியோ வீச்சுகள் மற்றும் ஸ்டீரியோ இசை கலந்த இந்த அனுபவம் பார்வையாளர்களை மாய உலகை உணர வைக்கும்.
 
குடும்பம் முழுவதற்குமான நவீன பொழுதுபோக்கு மையமான ஐ ப்லே தற்போது எக்ஸ்டி சினிமான அனுபவத்தை வழங்கி வருகிறது. இதன் மூலம் பார்வையாளர்கள் பனி பொழிவு , புகை, நீர் குமிழ்கள், இடி மின்னல் ஆகியவற்றை திரைப்பட காட்சிகளுக்கு ஏற்ப உணர்ந்து பிரம்மிக்கலாம். ஐ ப்லே மைன்ஸ் 5 டிகிரி வெப்ப நிலை மற்றும் தொடர் பனிபொழிவை கொண்ட பனிவிளையாட்டையும் வழங்குகிறது. குடும்பத்துடன் விளையாடி மகிழ ஏற்ற இடம் இது.
 
இப்போது ஐ ப்லே இந்தியாவிலேயே முதல் முறையாக மேஜிக் ஹவுஸ் எனும் புதுமையான பொழுதுபோக்கு வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெய்மறக்க வைக்கும் ஹோலோகிராம் ஷோவாக இது அமைந்துள்ளது.

மேஜிக் ஹவுஸ், லேசர் கதிர்கள், பல அடுக்கு வீடியோ வீச்சுகள் மற்றும் ஸ்டீரியோ இசை ஆகிவற்றின் கலைவையுடன் பார்வையாளர்களை மெய்மறக்க வைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரையும் கற்பனையான உலகிற்கு இது அழைத்து செல்லும் . இந்த ஷோவை அனுபவித்தவர்கள், என்ன நடந்தது ? நான் எங்கே சென்று வந்தேன் ? போன்ற கேள்விகளை கேட்டுக்கொள்ளும் அளவுக்கு முற்றிலும் புதுமையான அனுபவத்தை பெறுவார்கள்.

மேஜிக் ஹவுஸ் தற்போது ’ஏ டிரிப் டூ பாரடைஸ்’ எனும் நிகழ்ச்சியை வழங்குகிறது. இதில் இரண்டு இலைஞர்கள் மாய உலகிற்கு சென்று பூமிக்கு திரும்பி வருகின்றனர்.இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு கற்பனைக்கும் எட்டாத அனுபவத்தை அளித்து வியக்க வைக்கும். வண்ணமயமான உணரவையும் அளிக்கும்.

ஜெர்மனிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்திய நிபுணர்களால் மேஜிக் ஜவுஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான முதலீடு 70,000 யூரோக்கள்.  இதை நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரவி இந்தியாவுக்கு நவீன பொழுதுபோக்கு அனுபவத்தை கொண்டு வரும் நோக்கத்துடன் அமைத்துள்ளார். இந்த மையத்தை பிரபல திரைப்பட நடிகர் சிம்பு வண்ணமயமான நிகழ்ச்சியில் துவகி வைத்தார்.

இந்தியாவில் பொழுதுபோக்கு அனுபவத்தை மாற்றி அமைக்க கூடிய இந்த மையத்தை முன்னணி கட்டிட கலைஞர்கள் மற்றும் கலை இயக்குனர்கள் வடிவமைத்துள்ளனர். இந்திய பார்வையாளர்கள் ஏங்கிய உலகத்தரமான பொழுதுபோக்கு அனுபவத்தை இது சாத்தியமாக்கும்.

இந்திய பொழுதுபோக்கு துறையில் முக்கிய மைல்கல்லான இந்த மேஜிக்‌ஷோ சென்னைக்கு சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும்.

பத்து நிமிட மெய்மறக்க வைக்கும் அனுபவத்திற்கு நபர் ஒருவருக்கு கட்டணம் ரூ.300.

அனைத்து வார நாட்களிலும் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த மையம் இயங்கும். வேளச்சேரி ஐ ப்லே பினிக்ஸ் மார்கெட் சிட்டியில் இந்த புதுமையான அனுபவத்தை பெறலாம்
tamil matrimony_HOME_468x60.gif

Comments