2nd of December 2013
சென்னை::தமிழர்களுக்கு இசையமைப்பாளர் ஸ்ரீலோகாவை அவ்வளவு பரிட்சயம் இருக்காது. நாளைய தீர்ப்புக்குப் பிறகு ஆந்திரா பக்கம் போனவரை தெலுங்கு சினிமா கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிட்டது.
தெலுங்கில் மட்டும் பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் ஸ்ரீலேகா ஒரு பாடகியும்கூட. இதுவரை நாலாயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார்.
இசையமைப்பாளர்கள் தங்கள் இசையில் பாடுவதற்குதான் முன்னுரிமை அளிப்பார்கள். இவர் கொஞ்சம் வித்தியாசம். தனது இசையில் அவ்வளவாக பாட ஆர்வம் காட்டுவதில்லை.
ஆண் இசையமைப்பாளர்களின் முழுமையான ஆதிக்கத்தில் இருக்கும் தமிழ் சினிமாவில் காதல் சொல்ல ஆசை படத்தின் மூலம் தனது இரண்டாவது வருகையை ஸ்ரீலேகா பதிவு செய்திருக்கிறார்.
தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தால் தமிழ் சினிமாவுக்கு இசையமைக்க ஸ்ரீலேகா தயாராகவே இருக்கிறார். இவர் பிரபல இசையமைப்பாளர் கீரவாணியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment