ஏப்ரலில் நடிகை சமீரா ரெட்டிக்கு டும் டும் டும்!!!

28th of December 2013
சென்னை::இரண்டு வருட காதலரை மணமுடிக்க இருக்கிறார் நடிகை சமீரா ரெட்டி.
வாரணம் ஆயிரம், அசல், வேட்டை, வெடி, நடுநிசி நாய்கள் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சமீரா ரெட்டி. கடந்த 2வருடங்களுக்கு முன் சமீராவுக்கு, மோட்டார் பைக் நிறுவன அதிபர் அக்ஷய் வர்தேவுடன் பழக்கம் ஏற்பட்டதாம்.
இந்த பழக்கம் நட்பாக மாறி நாளடைவில் காதலாக மலர்ந்திருக்கிறது. பல இடங்களில் இருவரும் ஒன்றாக சுற்றியுள்ளனர். இருப்பினும் அவர்கள், தங்களது காதலை வெளிப்படுத்தாமல் ரகசியம் காத்து வந்தனர்.
இந்நிலையில் சமீரா, அக்ஷய் திருமண நிச்சயதார்த்தம் பாந்தராவில் உள்ள சமீராவின் வீட்டில் கடந்த வாரம் ரகசியமாக நடந்திருக்கிறது.
இதில் பங்கேற்க நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்புவிடுக்கப்பட்டதாம்.
 
இது குறித்து சமீரா கூறுகையில், எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது உண்மைதான் என்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடக்க உள்ளது எனவும் கூறியுள்ளார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments