19th of December 2013
சென்னை::தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார் உள்ளிட்ட புகார்களை தொழிலதிபர் மீது சுமத்தி வழக்கு தொடர்ந்த நடிகை ராதா, தற்போது திடீரென்று பல்டியடித்து வழக்கை வாபஸ் பெற்றார்.
சுந்தரா டிராவல்ஸ் உள்பட ஏராளமான தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ராதா. இவர் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார். சென்னை திருவல்லிகேணியை சேர்ந்த தொழிலதிபர் பைசூல் மீது நடிகை ராதா பரபரப்பு புகார் மனு கொடுத்தார்.
தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி தொழிலதிபர் பைசூல் 6 ஆண்டுகள் தன்னோடு குடும்பம் நடத்தியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், ரூ.50 லட்சம் பணம் மற்றும் நகைகளை மோசடி செய்து விட்டதாகவும் புகார் மனுவில் நடிகை ராதா குறிப்பிட்டிருந்தார்.
அவரது புகார் மனு மீது வடபழனி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க தொழிலதிபர் பைசூல் 3 முறை முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். 3 முறையும் அவரது முன்ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இந்த நிலையில் நடிகை ராதா தொழிலதிபர் பைசூலை கைது செய்ய வேண்டுமென்றும், அவரை சிறைக்கு அனுப்பாமல் விடமாட்டேன் என்றும் சவால் விட்டு பேட்டி கொடுத்து வந்தார். மேலும், இது குறித்து கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு நடிகை ராதா திடீரென்று வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். தொழிலதிபர் பைசூல் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், அவர் மீதான வழக்கை கைவிட்டு விடவேண்டும் என்றும் மனு எழுதி கொடுத்துவிட்டு அவசரமாக சென்றார். ஆனால் போலீசார் இதை நீதிமன்றத்தில் போய் சொல்லுங்கள் என்று தெரிவித்தனர். அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் நடிகை ராதா காரில் ஏறி வேகமாக போய்விட்டார்.
புகாரை வாபஸ் வாங்கியதற்கான காரணம் குறித்து செய்தியாளர்களிடன் கூறிய நடிகை ராதா, "எது எப்படியோ பைசூல் எனது கணவர் தானே! அவரும் எத்தனை நாள்தான் ஓடி ஒளிவார். தொடர்ந்து அவரை ஓட விடுவதற்கு எனக்கு மனம் இல்லை. அதனால் புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன். இதற்கு மேல் என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்." என்று கூறினார்.

Comments
Post a Comment