31st of December 2013
சென்னை::புத்தாண்டு தினத்தை வெளிநாடுகளில் கொண்டாட ஹீரோயின்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
சென்னை::புத்தாண்டு தினத்தை வெளிநாடுகளில் கொண்டாட ஹீரோயின்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
புத்தாண்டு தினத்தை ஆடம்பர நட்சத்திர ஓட்டல்கள், பிரபலமான சுற்றுலா தலங்களுக்கு சென்றுதான் இதுவரை ஹீரோயின்கள் கொண்டாடி வந்தனர். இந்த தடவை அவர்களுக்கு அது அலுத்து போய் விட்டது போலும். 2014 புத்தாண்டை கொண்டாட பல நடிகைகள் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த ஆசையில் ஷூட்டிங்கை வெளிநாடுகளில் வைத்து கொள்ளலாம் என தயாரிப்பாளர்களுக்கு அன்பு கட்டளை பிறப்பித்திருக்கின்றனர். சிலருக்கு அந்த யோகம் கிடைத்துள்ளது.
நடிகை பிரியா ஆனந்த், தாய்லாந்தில் புத்தாண்
டு தினத்தை கொண்டாடுகி
டு தினத்தை கொண்டாடுகி
றார். அங்கு நடக்கும் தமிழ் படத்தின் படப்பிடிப்பிலும் பங்கேற்கிறார். ‘பொதுவாக நான் பார்ட்டிகளில் பங்கேற்பதில்லை. ஆனாலும், இந்த புத்தாண்டை எனது குடும்பத்தினருடன் தாய்லாந்தில் கொண்டாட முடிவு செய்துள்ளேன்’ என்றார் அவர்.
நடிகை ப்ரியாமணியும் இம்முறை தாய்லாந்து புறப்பட்டு சென்றிருக்கிறார். அவருடன் தோழிகளும் சென்றிருக்கின்றனர். சமீபத்தில் பாங்காக்கில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தவர், அங்குள்ள புலிகள் சரணாலயத்திற்கு சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.‘புத்தாண்டு தினத்தில் தெலுங்கு மற்றும் இந்தி படங்களின் ஷூட்டிங்கு களில் பங்கேற்று குத்து பாடலுக்கு நடனம் ஆடுகிறேன். பிரபல பண்ணை வீடுகளில் இதுபடமாகிறது. பின்னர், எனது தோழிகளுடன் பிடித்தமான இடங்களுக்கு செல்கிறேன்.
புத்தாண்டில் எனது உடல் எடையை அதிகளவில் குறைக்க உறுதி எடுத்திருக்கிறேன்Õ என்கிறார் .
நடிகை ஹன்சிகா, ஏற்கனவே அமெரிக்கா புறப்பட்டு சென்றிருக்கிறார். அவருடன் நெருக்கமான தோழிகளும் சென்றிருக்கின்றனர். நியூயார்க் நகரில் அவர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார். தமன்னா, சுவாதி உள்ளிட்ட ஒரு சில ஹீரோயின்கள் மட்டும் புத்தாண்டை வீட்டிலேயே குடும்பத்தினருடன் கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
Comments
Post a Comment