10th of December 2013
சென்னை::தமிழில் முன்னணி நடிகையாக இருந்தபோதே அஞ்சலி வீட்டை விட்டு வெளியேறி ஐதராபாத்தில் குடியேறினார். சித்தி தொந்தரவால் வெளியேறியதாக கூறினார். தற்போது தனது வீட்டை சித்தி அபகரித்துள்ளதாகவும் அதனை மீட்டு தர வேண்டும் என்று கோரியும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ் படங்களில் இனிமேல் நடிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளார். தெலுங்கு படங்களில் மட்டுமே நடிப்பதென இருக்கிறார். ஆனால் அங்கும் அவருக்கு பட வாய்ப்பு இல்லை.
கடைசியாக தமிழில் ‘சிங்கம்–2’ படத்தில் ஒரு குத்தாட்டம் ஆடிவிட்டு போனார். இப்போது அவர் கைவசம் ஒரு படம் கூட இல்லை. குடும்ப சர்ச்சைகள் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளன. உடல் எடையும் கூடிக்கொண்டே போகிறதாம்.
சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த பொது நிகழ்ச்சியொன்றில் குண்டான அஞ்சலியை பார்த்து பலரும் வியப்பானார்கள். நிறைய சதை போட்டு அக்காள் நடிகை மாதிரி இருந்தாராம். படங்கள் இல்லாததால் உடற்பயிற்சி செய்யாமல் உடம்பு எடை போட்டுள்ளதாம். இதனால் கதாநாயகி கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கமாட்டார் என்று தெலுங்கு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் புறக்கணிக்கிறார்கள்.
இதனால் அவர் அதிர்ச்சியில் இருக்கிறார். மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு தூது அனுப்பலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம்.
Comments
Post a Comment