ஆடியோ விழாக்களை புறக்கணிக்கும் காஜல், ஹன்சிகா!!!

10th of December 2013
சென்னை::
கோலிவுட்டில் கடந்த சில மாதங்களாகவே படங்களின் ஆடியோ விழாக்களுக்கு அப்படங்களில் நடித்த கதாநாயகிகள் வருவதில்லை என்றொரு குற்றச்சாட்டு எழுந்து கொண்டிருக்கிறது. அதனால், நடிகைகளை படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வைக்க வேண்டும் என்பதற்காக 20 சதவிகிதம் சம்பளத்தை பிடித்து வைத்துக்கொண்டு ஆடியோ நிகழ்ச்சிக்கு வந்த பிறகு அதை கொடுங்கள் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய சட்டம் கொண்டு வந்தார்கள்.

ஆனபோதும் நடிகைகள் கேட்டபாடில்லை. அந்த சட்டம் போடப்பட்ட நேரத்தில் நடந்த என்றென்றும் புன்னகை படத்தின் ஆடியோ விழாவில் அப்படத்தில் நடித்த த்ரிஷா, ஆண்ட்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் தாங்கள் நடித்த பெரும்பாலான படங்களுக்கு வராமல் டேக்கா கொடுக்கும் நடிகைகள்தான். ஆனபோதும் சட்டம் தங்கள் மீது பாய்ந்த விடுமோ என்ற அச்சத்தில் வந்தார்கள்.

ஆனால், ஆரம்பத்தில் இருந்த பயம் இப்போது எந்த நடிகைகளுக்கும் இல்லை. ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தின் ஆடியோ விழாவுக்கு காஜல் அகர்வால் வரவில்லை. அதேபோல், சமீபத்தில் நடந்த பிரியாணி ஆடியோ விழாவுக்கு ஹன்சிகாவும் வரவில்லை. அதே நாளில் வெவ்வேறு படப்பிடிப்பு இருப்பதாக சொல்லி நழுவி விட்டார்களாம்.

இதுபற்றி யாராவது அவர்களிடம் கேட்டால், அந்த நடிகை வரவில்லை. இந்த நடிகை வரவில்லை என்று மற்றவர்களை சுட்டிக்காட்டி தங்களது தவறை நியாயப்படுத்துகிறார்களாம்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments