தூக்கம் இல்லாமல் திரியும் சந்தானம்!!!

10th of December 2013
சென்னை::
நம்பர்ஒன் காமெடியன் நாற்காலியில் இருந்து வடிவேலு இறக்கப்பட்டதும், படாரென்று அந்த இடத்தை பிடித்துக்கொண்டவர்தான் சந்தானம். ஆரம்பத்தில் பணம் ஒரு பிரச்னையே இல்லை படம் கிடைத்தால் போதும் என்று சம்பளம் பற்றி வாய் திறக்காமல் நடித்து வந்தார். ஆனால், மார்க்கெட் சூடுபிடித்ததும் அவரும் வேலையைக்காட்டத் தொடங்கினார்.

முதலில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் என்று கேட்கத் தொடங்கியவர், படத்துக்குப்படம் சம்பளத்தை உயர்த்தி இப்போது நாளைக்கு பத்து லட்சத்துக்கும் மேல் வாங்குவதாக தகவல். ஆனால், அதை கொடுத்து நடிக்க வைப்பதற்கும் நான் நீயென்று கால்சீட் கேட்டு முட்டிமோதிக்கொண்டு கிடக்கிறார்கள். அந்த அளவுக்கு தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமான காமெடியனாகி விட்டார் சந்தானம்.

இதனால், காசு பார்க்க இதுதான் சரியான நேரம். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வோம் என்று இரவு பகலாக நடித்துக்கொடுக்கிறார் சந்தானம். சில நேரங்களில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்குமபோதே, பக்கத்தில் வேறு படப்பிடிப்புகள் நடந்தால், மதிய இடைவேளை கேப்பில் போய் இரண்டொரு காட்சியில் நடித்துக்கொடுத்து விடுகிறார்.

ஆக,. தூங்ககூட நேரமில்லாமல் நடித்து வரும் சந்தானம், ஒரு ஸ்பாட்டில் இருந்து இன்னொரு ஸ்பாட்டுக்கு போகும் பயணத்தின்போதுதான் தனது காருக்குள் அமர்ந்தபடியே தூங்குகிறாராம். இப்படி ஒருநாளைக்கு இரண்டு, மூன்று மணி நேரம் குட்டித்தூக்கம் மட்டுமே போடுகிறாராம் சந்தானம். இப்படியே பழகி விட்டதால், இப்போதெல்லாம், என்றாவது ஒருநாள் படப்பிடிப்பை இல்லை என்றாலும் அவருக்கு தூக்கமே வருவதில்லையாம். விடிய விடிய மொட்டை மாடியில் குறுக்காலும் மறுக்காலும் நடந்து கொண்டிருக்கிறாராம் சந்தானம்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments