12th of December 2013
சென்னை::பொங்கல் ஜல்லிக்கட்டில் குதிக்க வேண்டிய படம் ரஜினியின் கோச்சடையான். ஆனால், அதேநாளில் வீரம், ஜில்லா படங்கள் வெளியாவதால், தியேட்டர் பிரச்னை மட்டுமின்றி வசூல் பிரச்னையும் ஏற்படும் என்று பின்வாங்கி விட்டனர். இந்த நிலையில், ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்துவதாக அறிவித்தவர்கள் இப்போது ஜனவரிக்கு மாற்றி விட்டார்களாம். அதோடு, தமிழ்ப்புத்தாண்டில் கோச்சடையானை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.
ஆனால், தமிழ்ப்புத்தாண்டில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாது. அதனால் கோச்சடையான் ஷோலோவாக நின்று சொல்லியடிப்பார் என்று பார்த்தால், அங்கேயும் போட்டிக்கு ஷங்கரின் ஐ படம் அதிரடியாகத் தயாராகிக்கொண்டிருக்கிறதாம்.
கடந்த ஒரு வருடமாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்து வரும் படம் ஐ. இதற்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த அந்நியன் படத்தை விடவும் இப்படம் மிக அதிரடியாக உருவாகியுள்ளதாம். அதனால் இப்படத்தின் மீது மிகுந்த ஆர்வத்துடன் உள்ளாராம் ஷங்கர்.
பொங்கலுக்கு விஜய்-அஜீத் மோதுகிறார்கள் என்றால், தமிழ்ப்புத்தாண்டுக்கு ரஜினியும், விக்ரமும் மோதிக்கொள்ள அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments
Post a Comment