துபாயில் பிரபு... முத்தமிழ்ச் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு!!!

31st of December 2013
சென்னை::துபாய் முத்தமிழ்ச் சங்கம் சார்பில் நடிகர் பிரபுவுக்கு துபாய் கான்கார்ட் ஹோட்டலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.டிசம்பர் 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு துபாய் கான்கார்ட் ஹோட்டல் அரங்கில் துபாய் முத்தமிழ்ச் சங்க தலைவர் மோகன் தலைமையில் நடிகர் பிரபுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் நடிகர் பிரபுவுக்கும், அவரது
 
துணைவியாருக்கும் துபாய் முத்தமிழ்ச் சங்கம் சார்பில் நினைவு பரிசினை சங்க தலைவர் மோகன், துணைச் செயலாளர் சிகாமணி ஆகியோர் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் நடிகர் பிரபு பேசுகையில் தான் துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாகவும், முத்தமிழ்ச் சங்க வரவேற்ப்பில் கலந்து கொள்வதில் மக்ழ்ச்சியளிப்பதாக நன்றியுடன் தெரிவித்தார்.
 
இதற்கு முன் தானும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களும் 2012ஆம் வருடம் துபாய் வந்தபோது துபாய் முத்தமிழ்ச் சங்கம் அளித்த வரவேற்பை நினைவு கூர்ந்தார்.வரவேற்பு நிகழ்ச்சியில் துபாய் முத்தமிழ்ச் சங்கம் சார்பில் ஷா, அணிஸ், சிகாமணி, ஷாஃபி, ராஜன், கணேஷ், அஜய், கணேஷ், ஹிதாயத்துல்லா, பாலா, வேலு, சுரேஷ், ஷாஃபிக், வெங்கட், ராஜா, நடராஜன், பாரதி, நூர்ஜஹான், ஷர்மிளா, வசந்தி மற்றும் திரளானோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments