6th of December 2013
சென்னை::அஜித் - கௌதம் மேனன் படம் பற்றிய அறிவிப்பு எப்போது வெளியானதோ அப்போதிலிருந்து ‘தல’ ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கௌதம் படம் என்றாலே அதில் ‘ரொமான்ஸு’க்கு கண்டிப்பாக முக்கியத்துவம் இருக்கும். ஆனால், அஜித் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தே பல வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக ‘கிரீடம்’ படத்தில் அஜித்தும் த்ரிஷாவும் காதலித்ததோடு சரி... அதன் பிறகு வந்த ‘ஏகன்’ படத்தில் கூட நயன்தாராவை ஒரு ‘மிஷன்’ சம்பந்தமாகவே காதலிப்பதுபோல் கதை சொல்லியிருந்தார்கள்.
ஆனால், கௌதம் படத்திற்காக மீண்டும் அஜித் ரொமான்ஸில் குதிக்கலாம் என்கிறார்கள். ஏனென்றால் இப்படம், ஆக்ஷன் + காதல் கலந்த படமாக இருக்கும் என கௌதமே கூறியிருக்கிறார். அதனால் இப்படத்தில் ‘தல’ தன் உடம்பைக் குறைத்து, டை அடித்து பழைய ‘க்யூட்’ அஜித்தாக மாறினாலும் ஆச்சரியமில்லை. இந்த செய்தி அஜித் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, ரசிகைகளையும் சந்தோஷத்தில் மிதக்க வைத்திருக்கிறது.
இப்படத்திற்காக ‘பிப்ரவரி 15’ஆம் தேதி முதல் கால்ஷீட் தந்திருக்கிறாராம் அஜித். மொத்த படத்தையும் ஒரே ஷெட்யூலில் முடிக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.
ஏற்கெனவே ஒரு முறை இருவரும் சேர்வதாக இருந்து, அது தள்ளிப்போனது. அதனால் இந்த முறை கௌதம் மேனனிடம் பேசிய அஜித் ‘‘கௌதம்... இந்தத் தடவை மிஸ் பண்ணக்கூடாது. கண்டிப்பா பெரிய புராஜெக்ட்டாப் பண்றோம்’’ என சொல்லிதான் ஏ.எம்.ரத்னத்தின் புரொஜெக்டில் இணைய வைத்திருக்கிறார்.கௌதம் படம் என்றாலே அதில் ‘ரொமான்ஸு’க்கு கண்டிப்பாக முக்கியத்துவம் இருக்கும். ஆனால், அஜித் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தே பல வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக ‘கிரீடம்’ படத்தில் அஜித்தும் த்ரிஷாவும் காதலித்ததோடு சரி... அதன் பிறகு வந்த ‘ஏகன்’ படத்தில் கூட நயன்தாராவை ஒரு ‘மிஷன்’ சம்பந்தமாகவே காதலிப்பதுபோல் கதை சொல்லியிருந்தார்கள்.
ஆனால், கௌதம் படத்திற்காக மீண்டும் அஜித் ரொமான்ஸில் குதிக்கலாம் என்கிறார்கள். ஏனென்றால் இப்படம், ஆக்ஷன் + காதல் கலந்த படமாக இருக்கும் என கௌதமே கூறியிருக்கிறார். அதனால் இப்படத்தில் ‘தல’ தன் உடம்பைக் குறைத்து, டை அடித்து பழைய ‘க்யூட்’ அஜித்தாக மாறினாலும் ஆச்சரியமில்லை. இந்த செய்தி அஜித் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, ரசிகைகளையும் சந்தோஷத்தில் மிதக்க வைத்திருக்கிறது.
இப்படத்திற்காக ‘பிப்ரவரி 15’ஆம் தேதி முதல் கால்ஷீட் தந்திருக்கிறாராம் அஜித். மொத்த படத்தையும் ஒரே ஷெட்யூலில் முடிக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.
Comments
Post a Comment