சமந்தாவால் நின்ற சூர்யா படப்பிடிப்பு!!!

3nd of December 2013
சென்னை::லிங்குசாமி இயக்கத்தில், அவருடைய சொந்த நிறுவனமான திருப்பதி பிரதற்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார்.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 10 நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. சமந்தா - சூர்யா சம்மந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த நிலையில், நடிகை சமந்தாவுக்கு ஏற்பட்ட தோல் நோய் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

சமந்தாவுக்கு ஏற்கனவே இதுபொன்ற தோல் நோய் ஏற்பட்டு, அதனால் அவர் மணிரத்னத்தின் 'கடல்' மற்றும் ஷங்கரின் 'நண்பன்' ஆகியப் படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார். பிறகு தீவிர சிகிச்சைக்கப் பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ள அவருக்கு மீண்டும் இந்த தோல் நோய் ஏற்பட்டு அவருடைய முகத்திலும், உடம்பிலும் சிவப்பு புள்ளிகள் தோன்றியுள்ளன. இதனால், தொடர்ந்து அவர் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு இயக்குநர் லிங்குசாமி, சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். சமந்தா இல்லாத காட்சிகளை டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

சமந்தாவுக்கு தோல் நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக சக்தி வாய்ந்த விளக்கு வெளிச்சம்தான் காரணம் என்று அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தெரிவித்தார்கள்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments