கிளாஷான ஆக்ஷன் படம் - 'இவன் வேறமாதிரி' குறித்து ரஜினி கருத்து!!! பிரம்மித்துப் போனேன்” - ’இவன் வேற மாதிரி’ பற்றி ரஜினிகாந்த்!!!
22nd of December 2013
சென்னை::சிவாஜியின் பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து ‘சிவாஜி ஐயாவின் குடும்பத்திலிருந்து ஒருவர் நடிக்க வரும்போது அந்த விழாவில் கலந்துகொள்ளாவிட்டால், அது நான் சினிமாவிற்கு செய்யும் துரோகமாகும்’ என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார் ரஜினி.
விக்ரம் பிரபு இரண்டாவதாக நடித்திருக்கும் ‘இவன் வேற மாதிரி’ திரைப்படம் உலகெங்கும் ரிலீஸாகி ரசிகர்களிடையேயும் நல்ல வரவேறை பெற்றுவரும் நிலையில், ரஜினிகாந்த இத்திரைப்படத்தைப் பார்த்து தனது வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார்.
எங்கேயும் எப்போதும்' படத்தை இயக்கிய சரவணின் இரண்டாவது படமாக சமீபத்தில்
வெளியான படம் 'இவன் வேறமாதிரி'. இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி
பிரதர்ஸ், யுடிவி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், நடிகர்
பிரபுவின் மகன் விக்ரம் பிரபு ஹிரோவாக நடித்துள்ளார். ஹிரோயினாக புதுமுகம்
சுரபி நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தை பார்த்தார். படத்தை மிகவும் ரசித்துப் பார்த்த ரஜினிகாந்த், படம் குறித்து கருத்து தெரிவிக்கையில், "‘இவன் வேற மாதிரி’ படத்தை பார்த்தேன். ஒரு கிளாஸான ஆக்ஷன் படம். இது வரைக்கும் எந்தப் படத்திலும் பார்த்திராத படத்தின் உச்சக்கட்ட காட்சிகள் பிரமிக்க வைக்கிறது. இது நல்ல பொழுதுபோக்கு படம். இந்தப்படம் வெற்றி பெற்ற என் வாழ்த்துக்கள்." என்று கூறினார்..

Comments
Post a Comment