29th of December 2013
சென்னை::மங்காத்தா படப்பிடிப்பின் போது, அப்படத்தில் பங்கு பெற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என அப்படக்குழுவினருக்கு, தனது கையாலேயே பிரியாணி சமைத்து பரிமாறிய நடிகர் அஜித், தற்போது 'வீரம்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற ஊருக்கே சோறு போட்டிருக்கிறார்.
விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி, தயாரிக்கும், 'வீரம்' படத்தை சிறுத்தை சிவா, இயக்குகிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மேலும் சந்தானம், விதார்த், பாலாமாகியோரும் நடித்துள்ளனர்.
தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இதன் பெரும் காட்சிகள் ஒடிசாவில் உள்ள ஒரு கிராமத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் பிரச்சினைகளே கதை. ஆரம்பத்தில் அமைதியாக வரும் அஜித் பிறகு ஆவேசமாகி ஆக்சனுக்கு மாறுவது போல் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளதாம்.
வீரம் படப்பிடிப்பு நடந்த ஒரு கிராமத்துக்கு இறுதியில் நடிகர் அஜித் உணவு பரிமாறியுள்ளார். கிராமத்தில் வசித்த ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்று சாப்பிட்டனர்.

Comments
Post a Comment