நாய் செத்துப்போச்சுப்பா! த்ரிஷாவுக்கு ஆறுதல் கூறும் திரையுலகம்!!!

10th of December 2013
சென்னை::
சும்மா ஓடிக்கொண்டிருக்கும் நாயைப்பார்த்தாலே சும்மா போகிறவர்கள் கல்லால் அடிக்கிற உலகமிது. ஆனால், த்ரிஷாவோ, நாய்கள் மீது ஒரு சின்ன துரும்பு பட்டாலும் துடித்துப்போகிறார். அந்த அளவுக்கு நாய்கள் மீது பாசமும், நேசமும் வைத்திருக்கிறார். இதற்காக பிராணிகள் நல வாரியத்தில் தன்னை இணைத்துக்கொண்டு நாய்களை பராமரித்து வருகிறார்.

அதோடு, தான் படப்பிடிப்புகளுக்காக அயல்நாடுகளுக்கு செல்லும்போது அங்கு தென்படுகிற மாற்று இன நாய்களையும் விடுவதில்லை அவர். மனசுக்குக்கு பிடித்து விட்டால் கேட்ட தொகையை கொடுத்து வாங்கிவந்து ஆசை ஆசையாய் வளர்க்கிறார். அந்த வகையில், நம்ம ஊர் நாய்கள், வெளிநாட்டு நாய்கள் என்று விதம்விதமாக நாய்களை வளர்த்து வருகிறார் த்ரிஷா.

இப்படி த்ரிஷா பாசத்தோடு வளர்ந்து வந்த ஒரு நாய் சமீபத்தில் இறந்து விட்டதாம். இதனால் சில நாட்களாக சோகத்தில் தள்ளாடிக்கொண்டிருக்கிறாராம் த்ரிஷா. இந்த சேதி திரையுலகத்தில் கசிந்ததையடுத்து, அவரது அபிமானத்திற்குரிய நடிகர்-நடிகைகள் பலரும் த்ரிஷாவை தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்து வருகிறார்கள்.

என்றாலும், நாயை நாய் என்று நினைக்காமல் தனது உறவுகளைப்போன்றே நினைக்கும் த்ரிஷாவால் அத்தனை எளிதில் அந்த சோகத்தில் இருந்து விடுபட முடியுமா என்ன? தொடர்ந்து சோக கீதம்தான் அவரது வீட்டைச்சுற்றி கேட்டுக்கொண்டிருக்கிறதாம்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments