28th of December 2013
சென்னை::வேலாயுதம்’ வெற்றிக்குப் பிறகு ஜெயம் ராஜா தனது தம்பி ஜெயம் ரவியை வைத்து ஒரு படம் இயக்கிக் கொண்டிருக்கிறார்.
சென்னை::வேலாயுதம்’ வெற்றிக்குப் பிறகு ஜெயம் ராஜா தனது தம்பி ஜெயம் ரவியை வைத்து ஒரு படம் இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இதில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஒரு ஹாக்கி வீரராம். அதுமட்டுமின்றி, படத்தில் நயன்தாராவுக்கு கராத்தே மாஸ்டர் வேடமாம்.
ஜெயம் ரவி-நயன்தாரா இருவரும் ஒரு கட்டத்தில் போலீஸ் அதிகாரிகளாகி, வில்லன்களின் சதித் திட்டங்களை எப்படி முறியடிக்கிறார்கள் என்பதை ஆக்ஷன் கலந்து சொல்கிறார்களாம். மேலும் படத்தில் நயன்தாராவுக்கு நாயகனுக்கு இணையான வேடம் என்பதால், ஆக்ஷன் காட்சிகளில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறாராம்.
விளையாட்டு வீரர் வேடம் ஒன்றும் ஜெயம் ரவிக்கு புதிதல்ல. ஏற்கெனவே, எம்.குமரன், தாஸ் உள்ளிட்ட படங்களில் விளையாட்டு வீரராக நடித்திருக்கிறார்.
Comments
Post a Comment