நயன்தாராவுடன் நடிக்க தயாராகும் ஜெயம் ரவி!!!

2nd of December 2013
சென்னை::சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வந்த நிமிர்ந்து நில் முடிவடைந்த நிலையில் தனது அடுத்தப் படத்துக்கான தயாரிப்புகளில் ஜெயம் ரவி இறங்கியிருக்கிறார்.

நிமிர்ந்து நில் ஜெயம் ரவிக்கு முக்கியமான படம். அமீரின் ஆதி பகவன் தந்த அடியை நிமிர்ந்து நில்தான் சரி செய்ய வேண்டும். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் சமுத்திரக்கனி படத்தை இயக்கியிருக்கிறார். தமிழில் படத்தை எடுத்த பின் தெலுங்கில் டப் செய்து, இரு மொழிப் படம் என்கிற பெயிண்டிங் வேலையெல்லாம் இல்லை. தெலுங்கில் இதே கதையில் நானி நடித்திருக்கிறார். ஆனால் இரண்டு மொழிகளுக்கும் ஒரே நாயகி, அமலா பால்.
 
அடுத்து ஜெயம் ரவி தனது அண்ணன் ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் நடிக்கிறார். வேலாயுதம் படத்தை சொந்த ஸ்கிரிப்டில் வெற்றிபெற வைத்த தைரியத்தில் ஜெயம் ராஜா புதிய ஸ்கிரிப்டையும் சொந்த கற்பனையில் உருவாக்கியிருப்பதாக சொல்கிறார்கள்.

இந்தப் படத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடியாக நடிக்கயிருப்பவர் நயன்தாரா. இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை என்பதால் கொஞ்சம் ஆர்வமாகதான் இருக்கிறார் ரவி.
 
டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள். நயன்தாரா பிறகு வந்து இணைந்து கொள்வார் என தெரிகிறது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments