இளையராஜா உடல் நலம் தேறியது: இன்று "டிஸ்சார்ஜ்'!!!

25th of December 2013
சென்னை::சென்னை: நெஞ்சுவலியால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, பிரபல திரைப்பட இசையமைப்பாளர், இளையராஜாவின் உடல் நிலை தேறியதால், இன்று வீடு திரும்புகிறார்.

திரைப்பட இசையமைப்பாளர், இளையராஜா, நேற்று முன்தினம் காலை, சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் இருந்த போது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

டாக்டர்கள் பரிசோதித்தபோது, இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய் ஒன்றில், சிறிய அடைப்பு இருந்தது தெரியவந்தது. அறுவை சிகிச்சை இன்றி, நவீன சிகிச்சை முறையில், அடைப்பு நீக்கப்பட்டு, ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டது. இதையடுத்து, இளையராஜாவின் உடல் நிலை தேறி வருகிறது. நேற்றிரவு, தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்; இன்று மாலை வீடு திரும்புகிறார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments