பிளாக் பாண்டிக்கு இன்று திருமணம்: காதலியை கரம் பிடித்தார்!!!

2nd of December 2013
சென்னை::கனா காணும் காலங்கள் தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமானவர் பிளாக் பாண்டி. அங்காடி தெருவின் மூலம் சினிமாவில் காமெடி நடிகராக புகழ்பெற்றார். தற்போது பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். கோடம்பாக்கத்தில் ஒரு ரிக்கார்டிங் தியேட்டரையும் கட்டி உள்ளார்.
பிளாக் பாண்டி கடந்த சில வருடங்களாக மதுரையை சேர்ந்த ஜி.உமாமகேஸ்வரி என்ற பட்டதாரி பெண்ணை காதலித்து வந்தார். பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.
(டிசம்பர் 1) காலை வடபழனி 100 அடி ரோட்டில் உள்ள ஐஸ்வர்யா மஹாலில் இருவருக்கும் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் வெகு சிறப்பாக நடந்தது.
 
8.30 மணிக்கு மதுரை தெய்வதிரு எம்.சி.சொக்கலிங்கம் பிள்ளையின் பேரனும், எம்.சி.சேகர்&திருமதி மீனாட்சி அவர்களின் புதல்வனுமான எஸ்.லிங்கேஸ்வரன் என்கிற பிளாக் பாண்டி, மதுரை எம்.குணாள முதலியார்&பூங்குழலி தம்பதிகளின் மகளுமான உமாமகேஸ்வரி பத்மினி கழுத்தில் தாலி கட்டி தன் இல்லத்தரசியாக ஏற்றுக் கொண்டார்.
இந்த திருமண விழாவில் திரையுலக பிரமுகர்கள், உறவினர்கள், பாண்டியின் நண்பர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments