16th of December 2013
சென்னை::தனது காதல் மனைவியை பிரிந்தார் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்.பாலிவுட் உலகில் கொடிகட்டிப் பறப்பவர் ஹ்ரித்திக் ரோஷன்(வயது 39).நடிகர் சஞ்சய்கானின் மகள் சூசன்னே மீது காதல் பற்றிக் கொள்ளவே, கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்,

இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து பிரிந்து வாழ முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து ஹ்ரித்திக் ரோஷன் கூறுகையில், எங்களது 17 ஆண்டுகால உறவுமுறை முடிவுக்கு வந்துவிட்டது.என்னை விட்டு பிரிய அவர்(சுசன்னே) தீர்மானித்துவிட்டார், இது எனது குடும்பத்தினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த நேரத்தில் என்னையும், எனது குடும்பத்தினரையும் தனிமையில் அனுமதிக்குமாறு ஊடகங்களை கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இதன் காரணமாக தனது ரசிகர்கள் துவண்டுபோய் விடக் கூடாது என்றும், நான் மீண்டுவர தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதற்கிடையே ஹ்ரித்திக்கின் மாமனார் கூறுகையில், ஹ்ரித்திக்- சூசன்னே தம்பதிக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.அவர்கள் இருவரும் நன்கு படித்தவர்கள், அருமையான தம்பதியினர்.இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகளை கருத்தில் கொண்டு சிறிது காலம் பிரிந்து வாழ தீர்மானித்து இருக்கிறார்கள்.இதை முடிவு என்று கருதுவது தவறு, அவர்கள் இருவரும் நிரந்தரமாகப் பிரியவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
Comments
Post a Comment