பாடகர் ஆன விடிவி கணேஷ்!!!

4th of December 2013
சென்னை::கெளதம் மேனன் இயக்கிய படங்களில் அவ்வப்போது சிறு சிறு வேடங்களில் தலை காட்டி வந்த வி.டி.வி கணேஷ், 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் ஒளிப்பதிவாளர் கதாபாத்திரத்தில் நடித்து, "இங்கே என்ன சொல்லுது..." எனற வசனத்தின் மூலம் பி
ரபலமானார்.

அவருடைய கனீர் குரலின் மூலம் தற்போது பிரபல நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வரும், வி.டி.வி.கணேஷ், 'இங்கே என்ன சொல்லுது' என்ற படத்தை தயாரித்து, அதில் கதையின் நாயகனாவும் நடித்து வருகிறார். இப்படத்தில் எஸ்.டி.ஆர் என்ற சிம்பு கெளரவ தோற்றத்தில் நடிக்கிறார். இதில் கணேஷுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மினும், சிம்புவுக்கு ஜோடியாக ஆண்ட்ரியாவும் நடிக்கிறார். கதையை நகர்த்தும் முக்கிய வேடத்தில் சந்தானம் நடிக்கிறார். இவர்களுடன்  பாண்டியராஜன், மயில்சாமி, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், ஸ்வர்ணமால்யா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் பிரபல எடிட்டர் ஆண்டனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தரன் இசையமைத்துள்ள இப்படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் இடம்பெறுகின்றன. இதில் இரண்டு பாடல்களை விடிவி கணேஷ் எழுதியுள்ளார். எழுதியது மட்டும் இன்றி, தனது கனீர் குரலில் ஒரு பாடலை பாடவும் செய்துள்ளார். இந்த பாடல் பட்டாம்பூச்சியின் வாழ்க்கையைப் பற்றிய தத்துவப் பாடலாம்.

'இங்க என்ன சொல்லுது' படத்தின் பாடல்கள் நாளை (டிசம்பர் 5) வெளியாகிறது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments