14th of December 2013
சென்னை::கண்ணா லட்டு தின்ன ஆசையா’ பட ஹீரோயின் விசாகா சிங் கூறியதாவது:
படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகிறது. நிறைய படங்களில் நடிக்கிறேன் என்று எண்ணிக்கை காட்டுவதற்காக அவற்றை ஒப்புக்கொள்ளவதில்லை. சமீபத்தில் பிரபல பாலிவுட் இயக்குனர் ஒருவர் கால்ஷீட் கேட்டு வந்தார்.
அதில் கவர்ச்சி பளிச்சிடும் வெள்ளை நிற ஷர்ட், சிவப்பு நிற ஷார்ட்ஸும் அணிந்து நடிக்க கேட்டார். நான் அதிர்ச்சி ஆனேன். உடனடியாக அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன். எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி முகம் சுழிக்கும் வகையில் நடிக்க மாட்டேன்.
நல்ல கதைகளில் நடிக்கவே விரும்புகிறேன். தற்போது ‘வாலிப ராஜா’ படத்தில் நடித்து வருகிறேன். கடந்த ஆண்டு இதேநேரத்தில்தான் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் வெளியானது. அது என் வாழ்க்கையை மாற்றிவிட்டது. இவ்வாறு விசாகா சிங் கூறினார்.

Comments
Post a Comment