23rd of December 2013
சென்னை::ரஜினி ஒவ்வொரு படத்தை முடித்ததும் அடுத்து அவரை வைத்து படம் இயக்க கதைகளுடன் சில முன்னணி இயக்குனர்கள் முற்றுகையிடுவார்கள். அப்படி செல்லும் அனைவரையும் தனது ராகவேந்திரா கல்யாண மண்டபத்துக்கு வரவைத்து மணிக்கணக்கில் சளைக்காமல் கதை கேட்பார் ரஜினி. அதையடுத்து, அதில் ஒன்றை செலக்ட் பண்ணி விட்டு, மற்ற டைரக்டர்களிடம் இன்னொரு முறை நாம சேர்ந்து படம் பண்ணுவோம் என்று பக்குவமாக சொல்லி விடுவார்.
அதேபோல்தான், ரஜினி சிகிச்சைக்காக சிங்கப்பூர் செனறு பூரண குணமடைந்து விட்டு சென்னை திரும்பியபோதும், சில இயக்குனர்கள் அவரை நோக்கி படையெடுத்தனர். அப்படி சென்றவர்களில் கே.வி.ஆனந்த் சொன்ன கதையையும் கேட்டார் ரஜினி ஆனால், இன்று வரை அந்த கதை பற்றி எஸ் ஆர் நோ சொல்லவில்லையாம். ஆனபோதும் பல மாதங்களாக நம்பிக்கையோடு காத்திருந்த அவர், பின்னர் ரஜினியிடமிருந்து க்ரீன் சிக்னல் விழும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டார். அதனால், அதையடுத்து அவரது மருமகன் தனுஷை புக் பண்ணி அநேகன் படத்தை தொடங்கி விட்டார்.
இந்த நிலையில், ரஜினிக்காக உருவாக்கிய கதைக்கு வேறு எந்த நடிகர் பொருத்தமாக இருப்பார்கள் என்று ஆராய்ந்து வந்த கே.வி.ஆனந்த், இப்போது அந்த கதையை அஜீத்தை சந்தித்து கூறியுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. வருகிற பிப்ரவரியில் கெளதம்மேனன் இயக்கும் படத்தில் நடிக்கும் அஜீத், அதை முடித்ததும் நடித்துத்தருவதாக கே.வி.ஆனந்திடம் கூறியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

Comments
Post a Comment