மீண்டும் காதல்சர்ச்சையில் நஸ்ரியா!!!

5th of December 2013
சென்னை::நேரம் படம் மூலம், தமிழுக்கு வந்த நஸ்ரியா, அப்போதிலிருந்தே ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டு வருகிறார். திருமணம் என்னும் நிக்கா படத்தில் ஜெய்யுடன் நடித்தபோது, இருவருக்குமிடையே காதல் தீ பற்றிக் கொண்டதாக அப்போது கலர் கலராக கிசுகிசுக்கள் பரவி வந்தன. இதையடுத்து, நய்யாண்டியில் தொப்புள் விவகாரம் பூதாகரமாக வெடித்தபோது, அந்த காதல் செய்தி காணாமல் போனது. அதனால், கடந்த சில மாதங்களாக எந்த சலசலப்பும் இல்லாமல் அமைதியாக நடித்துக் கொண்டிருந்தார் நஸ்ரியா.

இந்த நிலையில், வாய் மூடி பேசவும் படத்தில், மம்முட்டி மகன் துல்கர் சல்மானுடன் நடித்து வரும் நஸ்ரியாவை, அவருடன் இணைத்து, புதிய காதல் செய்தி பரவியுள்ளது. ஆனால், வழக்கம் போல், பரபரப்புதான் தன் வளர்ச்சிக்கு வரம் என்பதாலோ என்னவோ, அமைதி காத்து வருகிறார் நஸ்ரியா. ஆனால், சல்மான் ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments