வாழ்க்கை கொடுத்த குருவை மறந்த சிஷ்யன்;அடி முட்டாள் என திட்டிய குரு!!!

30th of December 2013
சென்னை::சினிமாவில் ஊர் உலகத்துக்கெல்லாம் கருத்து சொல்லும் காமெடியன், ஹீரோவாக நடித்த எந்தப் படமும் இதுவரை ரிலீசாகவில்லை. இப்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அதன் ஆடியோ ரிலீஸ் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய காமெடியன், விழாவுக்கு வந்திருந்த ஏ.ஆர்.ரகுமான், மணிரத்னம், பாரதிராஜா, கேயார், விக்ரமன் ஆகியோரை வானளாவ புகழ்ந்து தள்ளிவிட்டு தன்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய கே.பாலச்சந்தர் பற்றி பேச மறந்து விட்டார். பிறகு சிறிது நேரத்திற்கு பிறகு மன்னிப்பு கேட்டுக் கொண்டு பேசினார். இதைத் தொடர்ந்து பேச வந்த பாலச்சந்தர் கூறியதாவது:
செகரட்டரியேட்ல கிளர்க்கா வேலை பார்த்துகிட்டு இருந்தவன் சின்ன சின்ன கவிதை எழுதிக் கொண்டு வந்து என்கிட்ட காட்டி வாய்ப்பு கேட்டான். நானும் தொடர்ந்து அவனுக்கு மூன்று படத்துல வாய்ப்பு கொடுத்தேன். முதல் படத்துலேயே தன்னை அறிவாளியா காட்டிக்கிட்டுதான் நடிச்சான். ஆனா நான் அவனை அப்போதே முட்டாள்னுதான் திட்டுவேன். இப்போ என் பெயரை மறந்துட்டு தான் அடிமுட்டாள்னு புரூப் பண்ணிட்டான். என்றார்.
இந்தப் படத்திற்கு வெங்கட் க்ருஷி என்பவர் இசை அமைத்திருந்தார். ஆனால் அவரை மேடைக்கு அழைக்கவே இல்லை. அவரைப் பற்றி ஒரு வார்த்தைகூட யாரும் பேசவில்லை. பாரதிராஜா மட்டும் பெயரை குறிப்பிட்டு ஹாட்ஸ் ஆப் யூ என்றார்.
tamil matrimony_HOME_468x60.gif
 

Comments