பிரபல ஹாலிவுட் நடிகர் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' பால் வாக்கர் விபத்தில் மரணம்!!!

2nd of December 2013
சென்னை::(லாஞ் ஏஞ்சல்ஸ் வாலன்சியா) பிரபல ஹாலிவுட் நடிகரும், ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' படங்கள் மூலம் புகழ் பெற்றவருமான பால் வாக்கர் கார் விபத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 40.
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படங்கள் மூலம் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் பால் வாக்கர். இவர், ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7-ம் பாகத்தில் நடித்து வந்தார்.
 
பால் வாக்கர் வடக்கு லாஞ் ஏஞ்சல்ஸ் வாலன்சியா என்ற இடத்தில் அறக்கட்டறை நிகழ்ச்சி ஒன்றுக்கு பங்கேற்க தனது நண்பரின் காரில் சென்ற போது கார் விபத்தில் சிக்கினார்.
 
இந்த விபத்தில் படுகாயமடைந்த பால் வால்கரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சிகிச்சை பலனிற்றி வால்கரின் உயிர் மருத்துவமனையில் பிரிந்தது.
 
பால் வால்கர் கார் டிரைவராக நடித்தே பிரபமடைந்தவர். இந்நிலையில் கார் விபத்தில் சிக்கி அவர் மரணமடைந்தது துருதிருஷ்டவசமானது.
 
பால் வால்கர் நடித்த ஹவர்ஸ் என்ற ஹாலிவுட் திரைப்படம் டிசம்பர் 13 அன்று திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் பால் வால்கரின் மரணம் அவரது ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

tamil matrimony_HOME_468x60.gif

Comments