மீண்டும் பரத்வாஜ்!!!

12th of December 2013
சென்னை::காதல் மன்னன் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் பரத்வாஜ். அமர்களம், ரோஜாகூட்டம், ஜெமினி, தமிழ், ஜே ஜே, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், ஆட்டோகிராப், அய்யா போன்ற ஏராளமான படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர். இவரது "ஒவ்வொரு பூக்களுமே..." பாடல் இளைஞர்களுக்கு டானிக்காக இருக்கிறது. "ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்..." மெலடியில் கிரங்க வைத்துக் கொண்டிருக்கிறது. "சிரிச்சு சிரிச்சு வந்த சீனாதானாடோய்..." துள்ளல் இசையாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் என்ன காரணத்தாலோ கடந்த மூன்று வருடங்களாக பரத்வாஜிற்கு சரியான வாய்ப்புகள் இல்லை. அவர் இசையமைத்திருக்கும் ஒரு சில படங்களும் ரிலீசாகவில்லை. இப்போது வில்லங்கம் என்ற படத்தின் மூலம் மீண்டும் தன் இசைப் பயணத்தை துவக்கி இருக்கிறார். நந்தா, மீனாட்சி நடிக்கும் இந்தப் படத்தை ரா.நா.சரவணன் என்பவர் டைரக்ட் செய்கிறார். இடைவெளி குறித்து பரத்வாஜிடம் கேட்டால் "ஒரு ஹிட் கொடுத்து விட்டு பேசுகிறேனே..." என்று ஒதுங்கிக் கொள்கிறார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments