என்ன கவர்ச்சி வேண்டாமா! - ஆச்சரியப்பட்ட நடிகை!!!

9th of December 2013
சென்னை::ஏ.வி.எம் புதிய பிள்ளையார் கோவிலில் ‘வில்லங்கம்’ படத்தின் துவக்க விழா நடைபெற்றது 
. ரெட் ஒன் புரடக்ஷன் சார்பாக இந்த படத்தை சுமதி அண்ணாமலையும், ரா.நா.சரவணனும் தயாரிக்கிறார்கள். ரா.நா.சரவணன் என்பவர் இப்படத்தை இயக்கிறார். இவர் ஏற்கனவே இயக்கி விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் ‘முகம் நான் அகம் நீ’

வில்லங்கம் படத்தில் ‘புன்னகை பூவே’ படத்தில் அறிமுகமாகி ஆணிவேர், வேலுர் மாவட்டம் போன்ற படங்களில் நடித்த நந்தா ஹீரோவாக நடிக்கிறார். கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் அறிமுகமான மீனாட்சி கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கிறார்.

கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் அறிமுகமான மீனாட்சி,சின்ன சின்ன இடைவெளிகளுக்கு பிறகு நடித்த கடைசி படம் கரு.பழனியப்பனின் 'மந்திரப் புன்னகை'. அதற்கு பிறகு மும்பைக்கே போய் செட்டில் ஆகிவிட்டார். அவரை தேடிப்பிடித்து தனது வில்லங்கம் படத்தில் நடிக்க வரவழைத்திருக்கிறார் ரா.நா.சரவணன். மும்பையிலிருந்து கிளம்பிய மீனாட்சி இப்படத்தின் போட்டோ ஷுட்டுக்குதான் நேரடியாக வந்து இறங்கினாராம். வரும்போதே மிகவும் கவர்ச்சியான உடையோடு அவர் வந்திறங்க, இங்கே அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உடைகள் எல்லாமே மூடிக் கொள்கிற ரகம். ‘உங்களுக்கு கவர்ச்சியா போஸ் வேணாமா ?’ என்று மீனாட்சி கேட்க, ‘உங்களை ஆபாசமில்லாமல் காட்டப் போகிறேன் என்றாராம் சரவணன். "என்ன கவர்ச்சி வேண்டாமா!" என்று ஆச்சரியப்பட்ட மீனாட்சி, என்னை படத்தில் நடிக்க அழைக்கும்போதே கவர்ச்சியா நடிக்கணும்னு சொல்லிதான் எல்லா டைரக்டரும் கூப்பிடுவாங்க. ஆனால் நீங்க ரொம்ப வித்தியாசமான ஆளா இருக்கீங்களே என்று வியந்தாராம்.

வில்லங்கம் படத்தில் அவர் முன்பாதியில் உடல் இளைத்தும் பிற்பாதியில் பத்துகிலோ உடம்பை ஏற்றியும் நடிக்கப் போகிறார். மீனாட்சியின் இப்போதைய உடல் எடையை கருத்தில் கொண்ட சரவணன், செகண்ட் ஹாஃப் கதையைதான் முதலில் படம் பிடிக்கிறார். இதற்கப்புறம் பத்து கிலோ உடல் எடையை குறைக்கப் போகிறார் மீனாட்சி.

இதுவரை பனிரெண்டு படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டேன். இந்த கதையை கேட்டதும் இந்த படத்தை விடவே மனசில்லை என்கிறார் நந்தா.

அன்றாடம் தினசரிகளில் வரும் உண்மை சம்பவம் ஒன்றை தழுவி இந்த கதையை உருவாக்கியிருக்கிறார் ரா.நா.சரவணன்.

இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைக்க, சினேகன் பாடல்கள் எழுதுகிறார். மாதவ் ராஜ் ஒளிப்பதிவு செக்கிறார். சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

tamil matrimony_HOME_468x60.gif

Comments