அஜீத்தின் வீரம் படத்துக்கு சென்சார் போர்டு கிரீன் சிக்னல்!!!

25th of December 2013
சென்னை::
அஜீத்தின் வீரம் படத்துக்கு சென்சார் போர்டு கிரீன் சிக்னல் காட்டியுள்ளது. அஜீத், தமன்னா, விதார்த், பாலா உள்பட பலர் நடித்துள்ள படம் வீரம். சிவா இயக்கியுள்ளார். ஜனவரி 10ம் தேதி படம் ரிலீசாகிறது. இந்த படத்தின் ஆடியோ சத்தம் இல்லாமல் வெளியாகிவிட்டது. இதற்காக விழா ஏதும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் முழு படமும் தயாராகிவிட்டதால் சென்சார் போர்டுக்கு தணிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பேமிலி பிளஸ் ஆக்ஷன் சப்ஜெக்ட் ஆக இந்த படம் உருவாகியுள்ளது. எந்த இடத்திலும் படத்துக்கு கட் கொடுக்கப்படவில்லை. யு சான்றிதழும் வழங்கி சென்சார் கிரீன் சிக்னல் வழங்கியுள்ளது. படத்துக்கு உலகம் முழுவதும் 2 ஆயிரம் பிரின்ட்டுகள் போடப்படுகிறது.

அஜீத் படங்களிலே அதிக பிரின்ட்டுகளுடன் வெளியாக உள்ள படம் இதுதான். இந்த படம் ரிலீசுக்கு பிறகு பிப்ரவரி 15ம் தேதி முதல் கவுதம் மேனன் இயக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அஜீத். இந்த படத்துக்கு சுராங்கனி என்ற தலைப்பு பரிசீலனையில் உள்ளது. ஏற்கனவே அஜீத்-கவுதம் இணைய இருந்த படத்துக்கு சுராங்கனி என்ற தலைப்பை பதிவு செய்தனர். அந்த தலைப்பை படம் எடுக்காத ஒரு கம்பெனி பதிவு செய்து வைத்து தர மறுத்தது குறிப்பிடத்தக்கது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments