17th of December 2013
சென்னை::குடும்ப பாங்கான தோற்றத்திலிருந்து கவர்ச்சி தோற்றத்துக்கு மாறுவதற்காக ஜிம்முக்கு தினமும் செல்கிறார் லட்சுமி மேனன்.
சென்னை::குடும்ப பாங்கான தோற்றத்திலிருந்து கவர்ச்சி தோற்றத்துக்கு மாறுவதற்காக ஜிம்முக்கு தினமும் செல்கிறார் லட்சுமி மேனன்.
கும்கி, பாண்டியநாடு, சுந்தரபாண்டியன் படங்களில் குடும்ப பாங்காக சேலைகட்டி நடித்த லட்சுமி மேனன் ஹோம்லி நடிகை என பெயர் பெற்றார். தொடர்ந்து அதேபோல் வேடங்கள் அமையவே வெறுத்துப்போனார்.
குடும்ப பெண்போல் இருப்பதால்தான் அதேபாணியில் படங்கள் வருகிறது. உனது தோற்றத்தை மாடர்னாக மாற்றிக்கொள் என்று தோழிகள் அட்வைஸ் கொடுத்தனர். இந்நிலையில், கவர்ச்சி வேடங்கள் வந்தால் நடிப்பீர்களா? என்றதற்கு, எந்தளவுக்கு எல்லையோ அதை எப்போதும் மீறமாட்டேன்‘ என்றார்.
பாண்டியநாடு படத்தை தொடர்ந்து மீண்டும் விஷால் ஜோடியாக நான் சிகப்பு மனிதன் படத்தில் நடிக்கும் லட்சுமிமேனன் விரைவில் தனுஷ் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். தொடர்ச்சியாக படங்கள் வருவதால் தனது தோற்றத்தை கவர்ச்சியாக மாற்றிக்கொள்ள தினமும் ஜிம்முக்கு செல்கிறார். இப்போதெல்லாம் ஷூட்டிங் முடிந்தால் நேராக வீட்டுக்கு செல்லாமல் ஜிம்முக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறாராம்.
Comments
Post a Comment