16th of December 2013
சென்னை::புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்கவுள்ளார் 'கோ' புகழ் கார்த்திகா. தேசிய விருது பெற்ற இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தன்னுடைய அடுத்த படத்திற்கு 'புறம்போக்கு' என்று பெயரிட்டுள்ளார்.
சென்னை::புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்கவுள்ளார் 'கோ' புகழ் கார்த்திகா. தேசிய விருது பெற்ற இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தன்னுடைய அடுத்த படத்திற்கு 'புறம்போக்கு' என்று பெயரிட்டுள்ளார்.
ஆக்ஷன் எண்டர்டெயினராக உருவாகவிருக்கும் இப்படத்தில் முதல் முறையாக ஆர்யாவும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கவுள்ளனர்.மக்கள் தேவைக்காக இருந்த பொது இடமான புறம்போக்கு நிலங்கள் இன்று மெல்ல மெல்ல தனியாரின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகி வருகிறது. அதைப் பற்றிய பின்னணியைக் கொண்ட சிந்தனை தான் இப்படத்தின் கதைக்களமாம்.
இப்படத்தை யு.டி.வியுடன், எஸ்.பி.ஜனநாதனின் 'பைனரி பிக்சர்ஸ்'-ம் இணைந்து தயாரிக்கவுள்ளது. இதன் முதற் கட்டப் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் குலுமணாலியில் துவங்குகிறது.இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகியாக 'கோ' கார்த்திகா ஒப்பந்தமாகியுள்ளார். என்னதான் கதைப்படி ரெண்டு ஹீரோன்னாலும், ஹீரோயின் ஒண்ணுதானாம்!
தற்போது கார்த்திகா அருண் விஜய்யுடன் 'டீல்' படத்தில் பிஸியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment