18th of December 2013
சென்னை::டிசம்பர் மாதத்தில் எந்த அளவுக்கு சென்னையில் பனி பொயிகிறதோ, அதைவிடவும் அதிகமாக இசை மழை பொழியும். எனக்குப் பார்த்தாலும், கர்நாடக இசைக் கச்சேரிகள் என்று சென்னையே விழாக்கோலமாக இருக்கும். தற்பொது இதை மேலும் அதிகப்படுத்தும்விதமாக, கடந்த 8 வருடங்களாக, லஷ்மன் சுருதி நடத்தி வரும் சென்னையில் திருவையாறு நிகழ்ச்சி செயல்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு 9வது முறையாக சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியை நடத்தும் லஷ்மன் சுருதி, பல புதிய முயற்சிகளை செய்துள்ளது. மேலும், இந்த ஆண்டு, தமிழம் முழுவதில் இருந்து, நிகழ்ச்சி நடக்கும் அத்தனை நாட்களிலும், முதியோர் இல்லத்தில் இருந்து 500 பேரை, அழைத்து வந்து, அவர்களுக்கு இலவசமாக கச்சேரிகளை பார்க்க வழிவகை செய்வதுடன், அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, பிரசாதம் உள்ளிட்டவைகளையும் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நாளை (டிச.18) தொடங்கும் இந்த நிகழ்ச்சி 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய அளவில் புகழ் பெற்று விளங்கும் இசை கலைஞ்சர்கள் இந்த நிகழ்சியில் பங்குபெற உள்ளார்கள்.
அத்துடன், எந்த வருடமும் இல்லாத அளவுக்கு, இந்த வருடத்தை சிறப்பாக்க நினைத்த சென்னையில் திருவையாறு, குழுவினர், இசை, நடனம், நடிப்பு என்று அனைத்திலும் தேர்ந்தவரான நடிகர் கமல் ஹாசனை, கொண்டு நிகழ்சியை தொடங்குகிறது. நாளை மாலை இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்கும் கமல்ஹாசன், கச்சேரிகளையும் கேட்டு ரசிக்கிறார்.

Comments
Post a Comment