13th of December 2013
சென்னை::வீரம்’ படம் வெற்றி பெற அஜீத் திருப்பதிக்குச் சென்று மொட்டை அடித்துள்ளார்.
அஜீத் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளிவரவுள்ளது ‘வீரம்’ திரைப்படம். இத்திரைப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.
மேலும், விதார்த், சந்தானம், அப்புக்குட்டி, மயில்சாமி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சிவா இயக்கியுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். நாளுக்கு நாள் வீரம் திரைப்படத்தின் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் ‘வீரம்’ படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடந்து முடிந்ததையொட்டி அஜீத்தும், இயக்குனர் சிவாவும் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானுக்கு தங்களது முடியை காணிக்கையாக்கி வந்திருக்கிறார்கள்.
அஜீத்தின் இந்த புதிய தோற்றம் பற்றித்தான் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பரிமாறி வருகிறார்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ளவர் அஜீத் என்றாலும், வெளிப்படையாக இப்படி திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து மொட்டை அடித்து வந்திருப்பது இதுதான் முதல் முறை!

Comments
Post a Comment