17th of December 2013
சென்னை::மொழி தெரியாததால் தமிழ், தெலுங்கு என எந்த தென்னிந்திய படத்திலும் நடிக்க மாட்டேன் என்றார் ஆமிர்கான். இது பற்றி அவர் கூறியதாவது:

மராட்டி மொழியை கற்பது உண்மைதான். மராட்டிய படத்திலும் நடிக்க விரும்புகிறேன். மும்பைவாசியாக இருப்பதால் இது எனக்கு எளிதாக இருக்கும். ஆனால் அதே சமயம், தமிழ், தெலுங்கு உள்பட எந்த தென்னிந்திய மொழியும் எனக்கு தெரியாது. அதனால் அந்த மொழியில் நடிப்பது எனக்கு சிரமமாக இருக்கும். கலைக்கு மொழி தேவையில்லை என்பது உண்மைதான். அதே சமயம், வசனங்களை உச்சரிக்கும்போது உணர்வுபூர்வமாக அதை வெளிக்காட்டுவது அவசியம்.
இந்த வசனத்துக்கு இது அர்த்தம் என இயக்குனர் கூறி, உணர்வை வெளியே கொண்டுவந்தாலும் அது செயற்கையாக இருக்கும். நமக்கே அதன் அர்த்தம் புரிந்தால்தான் அந்த கேரக்டரில் ஒன்ற முடியும். ஸ்டார் பவர் காரணமாக படம் ஓடுவதாக சொல்வதை ஏற்க மாட்டேன். நாங்கள் புரமோஷனுக்காக ஊர் ஊராக அலைவது, ரசிகர்களை சந்தித்து பேசுவது, மீடியா மூலம் பேசுவது என எல்லாமே முதல் 3 நாள் தியேட்டரில் கூட்டத்தை சேர்க்க மட்டும்தான் உதவும்.

அதற்கு பிறகு படம் நன்றாக இருந்தால்தான் ஓடும். லாஜிக்குகளை மீறி என்னால் நடிக்க முடியாது. சல்மான் கானால் மட்டும் அப்படி நடிக்க முடியும். அவர்தான் நம்பர் ஒன் நடிகர். இவ்வாறு ஆமிர்கான் கூறினார்.
Comments
Post a Comment