22nd of December 2013
சென்னை::ஜில்லா படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை, பாடல்களும் தயாராகவில்லை என்றெல்லாம் வேண்டுமென்றே வதந்தி பரப்பி வருகிறார்கள். ஆனால் அவை உண்மையில்லை என தெரிவித்தார் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி.
பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி படம் கண்டிப்பாக வெளியாகும் எனவும் சௌத்ரி தெரிவித்தார்.
சென்னை::ஜில்லா படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை, பாடல்களும் தயாராகவில்லை என்றெல்லாம் வேண்டுமென்றே வதந்தி பரப்பி வருகிறார்கள். ஆனால் அவை உண்மையில்லை என தெரிவித்தார் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி.
21-12-13 ஜில்லா படத்தின் பாடல்கள் வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் இரண்டு நாள்கள் முன்பு விஜய் நலிந்த தயாரிப்பாளர்கள் ஐந்து பேருக்கு தலா 5 லட்சம் வழங்கிய நிகழ்ச்சியில் ஜில்லா படத்தின் பாடல்களை வெளியிட்டனர். அதற்கான காரணத்தை சௌத்ரி தெரிவித்தார்.
ஜில்லா படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை, பாடல்கள் தயாராகவில்லை என திட்டமிட்டே வதந்தி கிளப்பி வருகிறார்கள். பாடல்கள் தயாராகிவிட்டது என்பதை தெரிவிக்கவே முன்னதாக பாடல்களை வெளியிட்டோம். அதேபோல் அதிகபட்ச திரையரங்குகளில் ஜில்லா வெளியாகிறது.
Comments
Post a Comment