30th of December 2013
சென்னை::நடிகை மீரா ஜாஸ்மின் துபாய் இன்ஜினியரை மணக்கிறார்.
தமிழில் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து
நடித்திருப்பவர் மீரா ஜாஸ்மின். தற்போது அவர் ‘இங்க என்ன சொல்லுது’,
‘விஞ்ஞானி’ ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். மலையாளத்திலும் ஒரு
சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மீரா ஜாஸ்மினுக்கும், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அனில்
ஜான் டைட்டஸ் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. இவர்களது
திருமணம் இரு வீட்டாரும் பேசி முடிவு செய்யப்பட்டதாகும்.
மீரா ஜாஸ்மின், அனில் ஜான் டைட்டஸ் திருமணம் திருவனந்தபுரத்தில்
இருக்கும் எல்.எம்.எஸ். சர்ச்சில் வருகிற ஃபிப்ரவரி 12ஆம் தேதி நடக்க
இருக்கிறது. தற்போது துபாயில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக பணிபுரிந்து வரும்
அனில் ஜான், சென்னை ஐ.ஐ.டி.யில் பி.டெக். படித்துள்ளார்.
ஏற்கனவே மீரா ஜாஸ்மினையும், மாண்டலின் ராஜேசையும் இணைத்து கிசுகிசுக்கள்
வெளியானது நினைவிருக்கலாம். இந்நிலையில் துபாய் இன்ஜினீயரை மீரா ஜாஸ்மின்
திருமணம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment